தேவனுடைய உரைக்கப்பட்ட வார்த்தையின் தவறாமை THE INFALLIBILITY OF GOD'S SPOKEN WORD 56-0404 புதன்கிழமை மாலை, ஏப்ரல் 4, 1956 பிலடெல்பியா சபை, சிகாகோ, இல்லினாய்ஸ், அமெரிக்கா சகோ.வில்லியம் பிரன்ஹாம் தேவனுடைய உரைக்கப்பட்ட வார்த்தையின் தவறாமை (56-0404) மாலை வணக்கம் நண்பர்களே. இப்போது, நீங்கள் அமருவதற்கு முன்பாக, கர்த்தராகிய இயேசுவிடத்தில் ஒரு சிறு வார்த்தை பேசுவோம். எங்கள் அன்புள்ள பரலோக பிதாவே, எல்லாவற்றிற்காகவும் நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம். ஏனெனில் கிறிஸ்துவினால் சகலமும் உண்டாக்கப்பட்டது. நாங்கள் கூடிவருவதற்கும், ஐக்கியம் கொள்வதற்கும், பரிசுத்த ஆவியானவரால் உமது அன்பு எங்கள் இருதயங்களில் ஊற்றப்படுவதற்கும் நீர் ஒரு வழியை உண்டு பண்ணினபடியால் நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம். இன்றிரவு இந்த சபைக்காகவும், இதன் போதகருக்காகவும், இதன் அனைத்து உதவிக்காரர்களுக்காகவும், ஊழியர்களுக்காகவும், அறங்காவலர்களுக்காக வும், இன்றிரவு எங்கள் வாசல்களுக்குள் வந்திருக்கும் ஒவ்வொரு வருகையாளர் களுக்காகவும் நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம். மேலும், இன்றிரவு தேவனுடைய மாபெரும் பரிசுத்த ஆவியானவர் நம் மத்தியில் வந்து, அளவில்லாமல் கிரியை செய்யும்படி நாங்கள் ஜெபிக்கிறோம். பிதாவே, அதை அருளும். தேவ மகிமைக்கென்று, இந்த வேளையில் நாங்கள் வார்த்தையைப் போதிக்க அணுகும்போது, இப்போது எங்கள் பாவங்களை மன்னியும். இயேசுவின் நாமத்தில் இதைக் கேட்கிறோம். ஆமென். நீங்கள் அமரலாம். 2 இன்றிரவு மீண்டும் இங்கே பிலடெல்பியா சபைக்குத் திரும்பியிருப்பதில் நாங்கள் மகிழ்ச்சி யடைகிறோம், நாங்கள்... நான் எல்லாவற் றையும் குழப்பிக் கொண்டேன். இன்றிரவு லேன் டெக்கில் (Lane Tech) கூட்டம் இருக்கும் என்று நான் நினைத்தேன்... நான் நேற்றிரவு லேன் டெக் என்று அறிவித்தேன். நல்லவேளையாக யாரோ ஒருவர் அதைக் கவனித்துவிட்டார். "அந்த பையன் உள்ளே வந்தான்... சகோதரன் வுட், அவர்கள் சில ஜெப அட்டைகளை (prayer cards) எடுத்துக்கொண்டு, ஜெப அட்டைகளைக் கொடுப்பதற்காக லேன் டெக்கிற்கு விரைந்து செல்ல இருந்தார்கள், திரும்பி வந்து, ""சொல்கிறேன் கேளுங்கள், அங்கே ஒருவரும் இல்லை"" என்றார்கள்." """நான் மீண்டும் மெக்சிகோவிற்கே சென்றுவிடவில்லையே?"" என்று நினைத்தேன். நாங்கள் மீண்டும் மெக்சிகோவிற்கு சென்று விட்டது போல நினைத்தேன். அன்றிரவு நாங்கள் காளைச் சண்டை மைதானத்திற்குச் சென்றபோது அங்கே ஒருவரும் இல்லை. அதனால்..." 3 ஆனால் தேவனுடைய மகிமைக்காக இன்றிரவு இந்த சபையில் இருப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். தேவன் உங்களை மிகவும் அதிகமாக ஆசீர்வதிப்பார் என்றும், நீங்கள் எதைப் பெற்றுக்கொள்ள வந்தீர்களோ அதைத் தந்தருளுவார் என்றும் நம்புகிறோம். சகோதரன் ஜோசப், ஒரு இரவில் அவர் அறிமுகம் செய்ய வரும்போது, அவர் எனக்குக் கொடுக்கும் அந்த நற்பெயருக்கு ஏற்றவாறு நான் வாழ முடிந்தால் எவ்வளவோ நன்றாக இருக்கும் என்று நான் விரும்புகிறேன். அவருக்கு என்னைப் பிடித்திருக்கிறது என்பதால்தான் அப்படிச் சொல்கிறார், உங்களுக்குத் தெரியும். நான் அத்தகைய அறிமுகத்திற்குத் தகுதியானவன் அல்ல, நான் கர்த்தருடைய ஊழியக்காரன் மட்டுமே. ஆனால் அவர் நிச்சயமாக... அவர் என்னை ஒரு முக்கிய இடத்தில் நிறுத்துகிறார், அதனால் நான் நன்றாக வாழ்ந்தாக வேண்டும், உங்களுக்குத் தெரியும். இன்றிரவு கர்த்தர் நம்மை ஒன்றுகூட்டி ஆசீர்வதிக்கும்படி, நான் நம்புகிற ஒவ்வொ ருவரும் இந்த நேரத்தில் சாத்தியமான அளவு நலமாகவும், வழக்கம்போல நன்றாகவும் உணருகிறீர்கள் என்று நம்புகிறேன். இங்கே உங்களில் அநேகர், நிச்சயமாக, ஒருவேளை தேவையுள்ளவர்களாகவும், வியாதிப்பட்டவர் களாகவும், தேவனுடைய ஆசீர்வாதத்தை வாஞ்சிக்கிறவர்களாகவும் இருக்கிறீர்கள். நாம் விரும்புகிற நன்மையானவைகளை நமக்குத் தரக்கூடிய, தமது ஆசீர்வாதங்களில் சிலவற்றை நமக்குத் தரக்கூடிய ஒரு தேவன் இன்றிரவு நமக்கு இருப்பதைக் குறித்து நாம் மகிழ்ச்சியடையவில்லையா? நமக்கு ஒரு பரலோக பிதா இல்லாவிட்டால் எப்படி இருக்கும்? 4 உங்களுக்குத் தெரியும், நான் வரும்போது சிறுவர்களிடம் சொல்லிக்கொண்டிருந்தேன், நாம் எப்படி எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று சொன்னேன். நீங்கள் சோகமாக இருப்பதை தேவன் விரும்பு வதில்லை. முன்கோபம் என்ன செய்கிறது என்று உங்களுக்குத் தெரியுமா? அந்தப் பழைய கோபம், அது மிக மோசமான பழைய காரியங்களில் ஒன்றாகும். எல்லா நோய்களுக்கும் சுமார் அறுபது சதவீதம் காரணம் கோபம்தான். ஆம் ஐயா, நீங்கள் வெளிப்படுத்தும் அந்தச் சீற்றங்கள், நினைவில் கொள்ளுங்கள், நீங்கள் அதைச் செய்யும்போது உங்களுக்குள்ளே ஒரு புற்றுநோயையோ, குடற்புண்ணையோ அல்லது அதுபோன்ற ஒன்றையோ வளர்த்துக் கொள்கிறீர்கள். "யாரோ ஒருவரைப் பற்றி நீங்கள் மிகவும் கவலைப்பட்டு, ""நான் இனிமேல் அங்கே போகமாட்டேன். அவர்களுக்குப் புத்தி வரும் வரை பொறுத்திருங்கள்"" என்று சொல்லும் போது. சரி. நினைவில் கொள்ளுங்கள், அதற்கு விலை கொடுக்கப்போவது நீங்கள்தான். மகிழ்ச்சியாக இருங்கள்." "ஒரு சிறிய கதை இருக்கிறது, ஒரு நாள் காலையில் ஒரு சிறிய ராபின் பறவை, ஒரு மரக்கிளையில் அமர்ந்து, தன் சிறிய ஜோடிப்பறவையைப் பார்த்து விசிலடித்துக் கொண்டிருந்ததாம். அந்தச் சிறிய ஜோடி அதன் அருகே பறந்து வந்து, ""உனக்குத் தெரியுமா, இன்றிரவு நான் ஒரு விஷயத்தைப் பற்றி மிகவும் கவலையாக இருக்கிறேன்"" என்றதாம். " """என்ன?"" என்று கேட்டதாம். ""நாம், ராபின் பறவைகள் ஒருபோதும் கவலைப்படுவதில்லை"" என்றதாம்." "5 ""ஆனால் அந்தப் பரிதாபத்திற்குரிய மனிதர்களைப் பற்றி நான் ஆச்சரியப்படுகிறேன், அவர்கள் முகத்தில் அவ்வளவு சுருக்கங்களுடன் நடக்கிறார்களே, ஒருவேளை நம்மை, ராபின் பறவைகளைக் கவனித்துக்கொள்வது போல அவர்களைக் கவனித்துக்கொள்ள அவர்களுக்கு ஒரு பரலோக பிதா இல்லையோ என்று நான் ஆச்சரியப்படுகிறேன்"" என்றதாம். " அது ஏறக்குறைய உண்மைதான். அவற்றில் ஒன்றுக்குக்கூட உயர் இரத்த அழுத்தம் இருப்பதாக நீங்கள் கேள்விப்பட்டதில்லை, இல்லையா? இல்லை. இல்லை, அவற்றுக்காக எந்த ஆம்புலன்ஸ் சத்தத்தையும் நீங்கள் கேட்பதில்லை, அல்லது அதுபோன்ற எதையும் கேட்பதில்லை (பாருங்கள்), அவை தேவன் வழங்கிய உண்மையான வழியில் வாழ்கின்றன. எப்பொழுதும் காரியங்களைத் தவறாகச் செய்வது நாம்தான். விஞ்ஞானத்தை அறிந்தவர்கள் நாமே, உங்களுக்குத் தெரியும்; நாம் புத்திசாலிகள். அதனால் அவர்கள்... நாம்... பறவைகள் மாறுவதில்லை. ஏதேன் தோட்டத்தில் பறவைகள் எப்படிக் கூடு கட்டினவோ, இப்போதும் அப்படியே கட்டுகின்றன என்பது உங்களுக்குத் தெரியும்; அவை ஒருபோதும் மாறுவதில்லை. "நாம்தான் மாறுகிறவர்கள். யூத சகோதரன்... இங்கே ஒரு யூதர் இருந்தால் நான் இதைத் தவறான அர்த்தத்தில் சொல்லவில்லை; நானும் ஒரு யூதன் தான். உங்களுக்குத் தெரியும், அவர் சொன்னார், ""சரி,"" அவர் சொன்னார், ""மக்கள்தான் பிரச்சனை."" பாருங்கள். அவர் சொன்னார், ""பறவை ஒரு பூச்சியைப் பிடிப்பதற்காகச் சாலையில் பறந்து செல்கிறது. கார் அதன் மேல் ஏறிவிடுகிறது."" " """அது மக்களால்தான்"" என்று சொன்னார். அதுவும் சரிதான். ""பூச்சியைப் பிடிக்க பறவைக்கு உரிமை இருந்தது, ஆனால்-ஆனால் மக்கள் ஒரு ஆட்டோமொபைலைக் கண்டுபிடித்து அதன் மேல் ஓட்டிவிட்டார்கள்."" பாருங்கள், ""அது மக்கள்தான்"" என்று அவர் சொன்னார். அது தவறு. உலகத்தைத் தலைகீழாக மாற்றுவது நாம்தான். " தேவன் அதை நமக்காக அற்புதமாகவும் அழகாகவும் படைத்தார். ஆனால் நமது வழிகளினால் நாம் அதைக் குழப்பிவிடுகிறோம். நாம் மிகவும் விஞ்ஞானபூர்வமானவர்கள், உங்களுக்குத் தெரியும்; எல்லாம் இந்த வழியில்தான் இருக்க வேண்டும், நாம் நினைக்கும் வழியில்தான் இருக்க வேண்டும். 6 நான் சில வாரங்களுக்கு முன்பு, அல்லது சில மாதங்களுக்கு முன்பு கலிபோர்னி யாவிலுள்ள மவுண்ட் பலோமர், அதாவது மவுண்ட் வில்சனுக்குச் சென்றிருந்தேன். அங்கே நான் ஒரு விண்வெளி ஆய்வு கூடத்தில் (observatory) அமர்ந்திருந்தேன், நான் சிறுவனாக இருந்தபோது, சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன்பு, சூரிய குடும்பத்தைப் பற்றி விஞ்ஞானப் பூர்வமாக நிரூபிக்கப்பட்டதாக நான் கற்றுக் கொண்ட அனைத்தும் இப்போது மாற்றப்பட்டு விட்டன, அவை அப்போதே தவறானவை என்று இப்போது விஞ்ஞானப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளன. அதைப்பற்றி நீங்கள் எப்போதாவது சிந்தித்திருக்கிறீர்களா? நான்... சூரியன் முற்றிலும் நிலையாக நிற்கிறது என்றும், உலகம்-உலகம் சுற்றுகிறது என்றும் அவர்கள் என்னிடம் சொல்வது வழக்கம். பாருங்கள்? ஆனால் இப்போது அது தவறு என்கிறார்கள். சூரியன்தான் ஓடுகிறது என்கிறார்கள். பாருங்கள்? சூரியனும் ஓடுகிறது, இப்போது இரண்டுமே ஓடுகின்றன. அதனால் எனக்கு-எனக்கு அது புரியவில்லை. எனவே உங்களுக்குத் தெரியும், யோசுவா சூரியனை நிற்கும்படி கேட்டபோது அவன் சரியாகத்தான் இருந்திருக்க கூடும். பாருங்கள்? எப்போதும் பைபிளுக்குத் திரும்பி வாருங்கள், அதுதான் உண்மையான புத்தகம் என்பதை நீங்கள் கண்டுகொள்வீர்கள். மிஸ்டர் மூர், அதாவது நான் அறிவியல் புத்தகத்தைச் சொன்னேன். மிஸ்டர் மூர், பைபிளே சரியான அறிவியல் புத்தகம் என்று நான் அர்த்தப்படுத்துகிறேன். பாருங்கள்? 7 மிஸ்டர் மூருடைய பையன் அறிவியலில் பட்டம் பெற்று, ஏதோ ஒரு வகையான கௌரவத்தை, அல்லது அதுபோன்ற ஒன்றைப் பெற்றிருந்தான். அப்போது ஒரு பெரிய விஞ்ஞானி வந்தார், அந்த நேரத்தில் நான் ஷ்ரெவ் போர்ட்டில் (Shreveport) கூட்டம் நடத்திக் கொண்டிருந்தேன். "அவர் அவனுக்கு இந்த கௌரவத்தைக் கொடுத்தார், அவர் அவனைத் தழுவியபோது, ""மகனே,"" என்றார், ""அறிவியல் கூடத்தில்,"" என்றார், ""நவீன அறிவியலில் பல புத்தகங்கள் உள்ளன,"" அவர் சொன்னார், ""நீ அவை அனைத்தையும் வாசித்தால், அநேகமாக உனக்கு இவ்வளவு ஆண்டுகள் எடுக்கும்,"" எத்தனை ஆண்டுகள் என்று நான் மறந்துவிட்டேன், நவீன அறிவியலின் சமீபத்திய தொகுதிகள் அனைத்தையும் வாசிக்க மூன்று அல்லது நான்கு ஆண்டுகள் ஆகும். " """நீ அவை அனைத்தையும் வாசித்து முடிக்கும் போது, நீ கற்றுக்கொண்ட அனைத் தையும் உன் மனதிலிருந்து அகற்ற வேண்டி யிருக்கும், ஏனெனில் அந்த நேரத்திற்குள் அது மாற்றப்பட்டிருக்கும்"" என்று சொன்னார். (பாருங்கள்) நவீன அறிவியலின் நிலை (பாருங்கள்), அவை அனைத்தும் மாற்றப் படுகின்றன. பாருங்கள்." "8 நான் ஒன்றும் சொல்லவில்லை. அன்றிரவு வரை காத்திருந்தேன், ஏனென்றால் அவர் கூட்டத்திற்கு வரவிருந்தார். நான் ஒரு... நான் சொன்னேன், ""உங்களுக்கு ஒன்று தெரியுமா? இன்று அந்த அறிக்கை சொல்லப்பட்டதை நான் கேட்டேன்,"" ஆனால் நான் சொன்னேன், ""பிள்ளைகளே, நான் உங்களுக்கு ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன்."" " "நான் சொன்னேன், ""ஒருபோதும் மாறாத ஒரு புத்தகத்தை நான் உங்களுக்குக் காட்ட முடியும். அதில் என்ன சொல்லப் பட்டிருக்கிறதோ, அது என்றென்றைக்கும் அப்படியே இருக்கும்."" அதுதான் சரி. எனவே நாம் இதோடு நிலைத்திருப்போம். இது சரியானது. தேவன் காரியங்களைச் செய்த விதம், மிகச் சரியானது." சில காலத்திற்கு முன்பு ஆபிரகாம் கேராரில், அங்கே கீழே ஒட்டகங்களை வைத்திருந்தான் என்று சொன்னது தவறு என்று அறிவியல் நிரூபித்ததை நான் கண்டேன், உங்களுக்குத் தெரியும், இப்படியாகச் சொன்னார்கள். இல்லை, அங்கே ஒருபோதும் ஒட்டகம் இருந்ததில்லை என்றார்கள். ஆனால், உங்களுக்குத் தெரியும், ஒரு நாள் அவர்கள் அங்கே ஒரு பழைய மண்வெட்டியை வைத்துத் தோண்டிக் கொண்டிருந்தார்கள், உண்மையாகவே அங்கே சில ஒட்டகங்கள் இருந்ததைக் கண்டுபிடித்தார்கள். நீங்கள் பார்க்கிறீர்களா? "9 எரிகோவிற்குக் கீழே சுவர்கள் ஒன்றின் மேல் ஒன்று விழுந்தன என்று அவர்கள் சொன்னார்கள். அவர்கள் அதைச் சுற்றிலும் தோண்டினார்கள், ""இல்லை, அது தவறு"" என்றார்கள். ஒரு நபர் சில ஆண்டுகளுக்கு முன்பு இன்னும் கொஞ்சம் மணலைத் தோண்டிப் பார்த்தார், பைபிள் சொன்னபடியே சுவர்கள் ஒன்றின் மேல் ஒன்று விழுந்திருந்தன என்பதைக் கண்டுபிடித்தார். " நீங்கள் எப்பொழுதும் இதற்குத் (வேதத்திற்குத்) திரும்பி வர வேண்டும்; இது உண்மையானது. நான் வார்த்தையை என் முழு இருதயத்தோடும் நம்புகிறேன். என் விசுவாசம் அதில்தான் அஸ்திபாரமிடப்பட்டுள்ளது. நாங்கள் இங்கே சபையில் இருக்கும்போது, ஒரு குடும்பமாகப் பேச முடிகிறபடியால் அநேக நேரங்களில், நான் இதைச் சொல்ல விரும்புகிறேன், [சகோதரன் பிரான்ஹாம் தொண்டையைச் சரிசெய்கிறார்] உங்களுக்கு ஒரு சிறிய உள் விவரத்தைத் தருகிறேன் (மன்னிக் கவும்.) என்னுடைய... இந்தக் காரியங்கள் நடப்பதற்கான காரணம், கர்த்தர் என்னிடத்தில் தயவாக இருப்பதற்கான காரணம், நிச்சயமாக, அது இறையாண்மையுள்ள கிருபை மற்றும் முன்குறித்தல். ஆனால் ஒரு காரியம், நான் அந்தப் பைபிளை சத்தியம் என்று நம்புகிறேன். மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் என்றோ, மக்களின் கோட்பாடுகள் என்ன வென்றோ, வெவ்வேறு சபைப்பிரிவுகள் அதை என்ன வாக்குகின்றன என்றோ எனக்குத் தெரியாது- எனக்குத் தெரியாது. அது எழுதப் பட்டிருக் கிறபடியே நான் பைபிளை நம்பு கிறேன், இப்படியே நம்புகிறேன். அந்த அடிப்படையில் தான் நான் அதை ஏற்றுக்கொள்கிறேன், ஏனென்றால் அது துல்லியமான சத்தியம், துல்லியமான சத்தியம் என்பதை நான் எப்பொழுதும் கண்டிருக்கிறேன். அது வேறொன்றாகவும் இருக்க முடியாது. 10 எனவே இப்போது, இந்த அற்புதமான புத்தகத்தைப் பற்றி நான் மிகவும் பெருமை யாகப் பேசியிருப்பதால், சில நிமிடங்களில் நாம் அதிலிருந்து வாசிக்க விரும்புகிறோம், இன்றிரவு நாம் சிறிது நேரம் பேசும்படி கர்த்தர் விரும்புகிற ஏதாவது அதில் காணப்படுமா என்று பார்ப்போம். "இப்போது, நான் இதை அதிகாரப் பூர்வமாகவும் மற்றும் அலுவலகப்பூர்வமாகவும் அறிவிக்கிறேன். சகோதரன் ஜோசப் மேட்சன் போஸ், இது அவருடைய சபையாக இல்லாவிட்டால், நான் அவரை ஜோசப் என்று அழைப்பேன், ஆனால் இது அவருடைய இடமாக இருப்பதால், நான்... நாளை இரவு இங்கே கூட்டங்கள் உண்டா? [சகோதரன் போஸ் பதிலளிக்கிறார், ""வெள்ளிக்கிழமை இரவு வரை.""] வெள்ளிக்கிழமை வரை இங்கே கூடாரத்தில், அல்லது சபையில் இருக்கும், மன்னிக்கவும். " "வெள்ளிக்கிழமை வரை இங்கே சபையில் இருக்கும். சகோதரன் வுட், பில்லி, ஜெப அட்டைகள் நாளை இரவு இங்கே கொடுக்கப்பட வேண்டும்; பையன்களே நீங்கள் அதைக் கவனியுங்கள். நாளை இரவு, ஆறு-முப்பது மணிக்கு என்று வைத்துக்கொள்வோம். அது உங்களுக்குப் போதுமான நேரத்தைத் தருமா, சகோதரன் வுட், பில்லி, அது உங்களுக்குப் போதுமான நேரமா? [சகோதரன் போஸ் சொல்கிறார், ""நாங்கள் மதிய வேளை கூட்டங்களை வைத்திருக்கிறோம், நீங்கள் விரும்பினால் அப்போது கொடுக்கலாம்.""]" "11 ஜோசப், நீங்கள் என்ன செய்யுங்கள் என்றால்... [சகோதரன் போஸ் சொல்கிறார், ""நீங்கள் விரும்புகிறபடியே""] மதிய வேளையில் கொடுப்பது நல்லதுதான், ஆனால் சிலர் வெளியே போய்விடுகிறார்கள், பிறகு இரவு நேரத்தில் நான், ""15 முதல் 35 வரை அழையுங்கள்"" என்று சொல்வேன். அவர்களில் எட்டு பேர் அங்கே இருக்கமாட்டார்கள்; அவர்கள் வீட்டிற்குச் சென்றிருப்பார்கள், திரும்பி வந்திருக்கமாட்டார்கள். " பிறகு நீங்கள் மீண்டும் குழப்பமடைவீர்கள். நீங்கள் பார்க்கிறீர்களா? எனவே நீங்கள் அங்கேயே இருந்து, உங்கள் அட்டையை எடுத்துக்கொண்டு நேராக மேடைக்கு வருவது நல்லது. நீங்கள் பார்க்கிறீர்களா? எனவே, கர்த்தருக்குச் சித்தமானால், நாளை இரவு வரிசைக்காக மக்கள் வந்து தங்கள் ஜெப அட்டைகளைப் பெற்றுக்கொள்ள ஆறு-முப்பது மணி போதுமான நேரமாக இருக்கும். "நீங்கள் அவரை நேசிக்கிறீர்களா? [சபையார், ""ஆமென்"" என்று சொல்கிறார்கள்] அருமை, அது மிக நன்று." இப்போது, ஏசாயா புஸ்தகம் 40-ம் அதிகாரத்தில், அதிலிருந்து ஒரு சூழலைப் பெற்றுக்கொள்வதற்காக ஒரு சிறிய வசனத்தை மட்டும் நாம் வாசிக்க விரும்புகிறோம், 40-ம் அதிகாரம் 3-ம் வசனம். கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள், அவாந்தரவெளியிலே நம்முடைய-நம்முடைய கர்த்தருக்கு, நம்முடைய தேவனுக்குப் (பாதையைச்) செவ்வைபண்ணுங்கள் என்றும், ... வனாந்தரத்திலே கூப்பிடுகிற சத்தம் உண்டாயிற்று. "இப்போது, அவர் தமது வார்த்தையை வாசிப்பதற்குத் தமது ஆசீர்வாதங்களைக் கூட்டுவாராக. ""கர்த்தருடைய வழியை ஆயத்தப்படுத்துங்கள்.""" "12 நிச்சயமாக, இது யோவான் ஸ்நான கனைக் குறிக்கிறது. ஆனால் இன்றிரவு நாம் அதை மற்றொரு கோணத்தில் பயன்படுத்த விரும்புகிறோம்: ""கர்த்தருடைய வழிகள்."" கர்த்தர் காரியங்களைச் செய்வதற்கு எப்பொ ழுதும் ஒரு வழியை வைத்திருக்கிறார். எனவே அவருடைய வழிகளைப் பற்றி நாம் சிந்திக்கும்போது, அவர் அதைப்பற்றி என்ன சொல்லியிருக்கிறார் என்பதைக் கண்டறிய நாம் பைபிளுக்குத் திரும்பிச் செல்ல வேண்டும். " எனவே பைபிளில் இரண்டு பெரிய உண்மைகள் உள்ளன, பழைய ஏற்பாட்டிலிருந்து இன்றிரவு நாம் அதைக் கையாள விரும்புகிறோம், ஆதியாகமம் முதல் மல்கியா வரை உள்ள அனைத்து எபிரெய தீர்க்கதரிசிகளும் இதைப் பற்றிப் பேசியிருக் கிறார்கள். அதிலிருந்துதான் அவருடைய வார்த்தையை உறுதிப்படுத்துதலின் முதல் வருகை இருந்தது. இப்போது அந்த இரண்டு உண்மைகள் இவைகளே: எல்லா எபிரெய தீர்க்கதரிசிகளும் வரப்போகும் மேசியாவைக் குறித்தும், பாவத்திற்காக ஒரு நிவாரணம் உண்டாக் குவதைக் குறித்தும் பேசினார்கள். மேலும் சபையானது அபிஷேகம் பண்ணப்பட்டு உலகமனைத்திற்கும் புறப்பட்டுச் செல்வதைக் குறித்தும் அவர்கள் பேசினார்கள். 13 இப்போது, எபிரெய தீர்க்கதரிசிகள், இரண்டு முக்கிய கருப்பொருள்கள், ஆதியாகமம் முதல் மல்கியா வரையிலான பைபிளின் ஒவ்வொரு அதிகாரத்திலும் ஏதோ ஓரிடத்தில், இந்தத் தலைப்புகளில் ஒன்று கையாளப் படுவதை நடைமுறையில் நீங்கள் காணலாம், பைபிள் முழுவதிலும்: மேசியாவின் வருகை, மற்றும் சபை அபிஷேகம் பண்ணப்பட்டு உலகம் அனைத்திற்கும் அனுப்பப்படுவது: அடையாளங்களிலும், மிருகங்கள் மூலமா கவும், அதுபோன்ற காரியங்களாலும், வெட்டுக் கிளிகள் போன்று, சுவர்களின் மேல் ஓடுகிற மற்றும் அணிவகுத்துச் செல்கிற பெரிய சேனைகள் போன்று பேசப்பட்டுள்ளது. எல்லாமே அடையாளங்களிலும், உவமை களிலும், நேரடியான போதனைகளிலும் இருந்தன, மேலும் எல்லாமே அந்த இரண்டு தலைப்புகளுக்குள் வந்தன. 14 இப்போது, தேவன் இதைச் செய்வதற்கு முன்பு, மேசியாவின் வருகைக்கு அவர் ஒரு வழியை உண்டாக்க வேண்டியிருந்தது. மேலும் சபை புறப்பட்டுச் செல்வதற்கு அவர் ஒரு வழியை உண்டாக்க வேண்டியிருந்தது. தேவன் பேசும்போது, அவர் ஒரு வழியை உண்டாக்க வேண்டியிருந்தது. இப்போது, தேவனுடைய வார்த்தை, இதோ இன்றிரவு... நான் வரும்போது என் மனதில் அந்தச் சிறிய எண்ணத்தை எடுத்துக்கொண்டேன், ஏனென்றால் பையன்கள் கீழே இறங்கி அட்டைகளைக் கொடுத்தால், நாம் ஜெபிக்கும் மக்களை வரிசைப்படுத்த நமக்கு சில விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகள் இருக்க வேண்டும் என்று நினைத்தேன். "நான் வரும்போது இதைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தேன், ""தேவனுடைய பேசப்பட்ட வார்த்தையின் வழுவாமை."" அது முற்றிலும் பூரணமானது. இந்தச் சபை மக்கள் மட்டும்... இதை யார் சொன்னது, இது உண்மையில் என்ன, இந்தப் பேசப்பட்ட வார்த்தை என்ன என்பதைப் பற்றி இன்றிரவு இந்தச் சபை மக்கள் தங்கள் மனதில் தெளிவுபெற்றால், நமக்கு எந்த சுகமளிக்கும் கூட்டமும் தேவையில்லை, இரட்சிப்பிற்கான அழைப்பு எதுவும் தேவை யில்லை; " அந்த வார்த்தை என்ன என்பதை நீங்கள் உணர்ந்துகொண்டாலே அது முடிந்து விடும். இப்போது, நாம் அதைக் கவனிப்போம். 15 அது ஒரு வார்த்தையாகப் பேசப் படுவதற்கு முன்பு; அது ஒரு சிந்தனையாக இருக்க வேண்டும். ஏனென்றால் ஒரு வார்த்தை என்பது, தேவன் பேசும்போது வெளிப் படுத்தப்பட்ட ஒரு சிந்தனையாகும். இப்போது, ஆரம்பத்தில் தேவன் பரலோகத்தின் பலகணிகள் வழியாகக் கீழே பார்த்து, பூமியில் நடக்கப் போகும் காரியங்கள் அனைத்தையும் கண்ட போது... நீங்கள் எப்போதாவது அமர்ந்து உங்கள் மனதில் ஒரு படத்தை வரைந்தி ருக்கிறீர்களா? இப்போது, தேவன் ஆரம்பத்தில் அப்படித்தான் செய்தார். பின்னர் அது அவருக்கு நன்மையாகத் தோன்றியது, எனவே அவர் அதைப் பேசினார், அது பேசப்பட்ட உடனே அது ஒரு வார்த் தையாக மாறியது. சிந்தனை யானது ஒரு வார்த்தையில் வெளிப் படுத்தப்பட்டது. இப்போது கவனியுங்கள், தேவன் தமது சிந்தனையை வெளிப்படுத்தி அதை ஒரு வார்த்தையாக மாற்றிய பிறகு, அவரால் அதை ஒருபோதும் திரும்பப் பெற முடியாது. "ஓ, என்னே. நீங்கள் அதைப் பார்க்கிறீர்களா? அவரால் அதிலிருந்து பின் வாங்க முடியாது. ""சரி, மன்னிக்கவும், நான் ஒரு தவறு செய்துவிட்டேன்"" என்று அவரால் சொல்ல முடியாது. அவரால் முடியாது. அவர் வழுவாதவர். அவர் சர்வவல்லவர், சர்வஞானி, சர்வவியாபி. பாருங்கள், நீங்களும் நானும் வளரும்போது, நாம் கல்வி கற்றவர்களாகவும் புத்திசாலிகளாகவும் எல்லாவற்றிலும் மாறுகி றோம். " "நாம் முன்னேறுகிறோம், மனித இனம் முன்னேறுகிறது; எல்லாமே முன்னேறுகிறது ஆனால் தேவன் முன்னேறுவதில்லை. அவர் ஆரம்பத்திலேயே பூரணராக இருந்தார்; எல்லாம் முடியும்போதும் அவர் பூரணராகவே இருப்பார்; அவர் இன்னும் பூரணராகவே இருக்கிறார். ""சரி, நான் அதிகமாகக் கற்றுக்கொண்டதால், இதைச் செய்வதற்கு என்னிடம் ஒரு சிறந்த வழி இருக்கிறது"" என்று அவரால் சொல்ல முடியாது. " அவர் ஆரம்பத்திலேயே பூரணராக இருந்தார். எனவே-ஆகையால், தெய்வீக சுகத்தைப் போதிக்கும்போது, தேவன் ஒரு சுகமளிப்பவர் அல்ல என்று யாராவது எப்படிச் சொல்ல முடியும்? பழைய ஏற்பாட்டின் ஆரம்பத்தில், நிழலாட்டங்களாக இருந்த பழைய நாட்களில், தேவன் அதைப் பூரணமாக்கியிருக்க முடியும். ஆனால் அவர்-அவர் தமது வார்த்தையைப் பேசினார், அது இந்த வழியில்தான் இருக்கும், அது அந்த வழியில்தான் இருக்க வேண்டும். அவர்-அதுதான் சிறந்த வழி. மக்களை அதனிடம் கொண்டு வருவதற்கு அதுதான் சிறந்த வழி, ஏனென்றால் எது சிறந்தது என்று அவருக்குத் தெரியும். 16 பின்னர் இஸ்ரவேல் புத்திரர் எகிப்திலிருந்து வாக்குத்தத்த தேசத்திற்கு வரும் வழியில் வனாந்தரத்தில் இருந்தபோது, அவர்களுக்கு... அவர்களுடைய தேவைகள் அனைத்தையும் சந்திப்பதாக தேவன் வாக்குறுதி அளித்திருந்தார்... பின்னர் அவர்கள் வியாதிப் பட்டு சாகும் நேரம் வந்தபோது, எகிப்தின் அனைத்து பரிகாரங்களும், அனைத்து மருந்துகளும், எகிப்தியர்களின் ஞானமும், அவர்களின் வேர்கள் மற்றும் மூலிகைகள் எதனாலும் இந்த நோயைக் குணப்படுத்த முடியவில்லை, அப்போது அந்த வழி... ஒரு நெருக்கடியில் மோசே தேவனை நோக்கிக் கூப்பிட்டபோது, மோசேக்கு தேவன் எடுத்த நடவடிக்கை, அதே நெருக்கடி வரும் ஒவ்வொரு முறையும் அவர் அதே நடவடிக்கையை எடுக்க வேண்டும். ஏன், அவர் அப்படிச் செய்யாவிட்டால், அவர் அன்றைக்கு அதைச் செய்தபோது தவறு செய்தவர் ஆகிவிடுவார். அப்படியென்றால் தேவன் குற்றவாளி (பாருங்கள்), எனவே அதே நெருக்கடி வரும்போது அவர் அதே வழியில் செயல்பட வேண்டும்... ஏனென்றால் அவர் அந்த வழியில் செயல்பட்டது பூரணமாக இருந்தால், ஒவ்வொரு முறையும் அவர் பூரணமான வழியைத் தவிர வேறு எந்த வழியிலும் செயல்பட முடியாது. அது பூரணமாகவே இருக்க வேண்டும். ஆமென். நீங்கள் பார்க்கிறீர்களா? "17 அவருடைய செயல்கள், அவருடைய வார்த்தைகள், அவருடைய சிந்தனைகள், எல்லாமே பூரணத்தின் கலப்படமற்ற ஒரே நீரோடையிலிருந்து வருகின்றன. இப்போது, அவர் உங்கள் விசுவாசத்தை அப்படித் திருப்பும்போது, சுகம் பெறுவது எளிதாகிறது. தேவன் ஏற்கனவே அதைப் பேசிவிட்டார். ""உன் நோய்களையெல்லாம் குணமாக்குகிற கர்த்தர் நானே"" என்று அவர் சொன்னால், அது நித்தியத்திற்கும் முடிவாகிவிட்டது: " "அது அப்படித்தான் இருக்க வேண்டும். அவர் அதைப் பேசும்போது, அவரால் அதைத் திரும்பப் பெற முடியாது. ""சரி, நான் ஒரு தவறு செய்துவிட்டேன்"" என்று அவரால் சொல்ல முடியாது. ஏனென்றால் அவர் பூரணர். நித்தியம் முதல் நித்தியம் வரை ஒரு தவறு இருக்க முடியாது. அவர் என்றென்றும் பரிசுத்தர்." "ஓ, என்னே. ""நான் செய்வேன்"" என்று அவர் சொன்னால், அது முடிந்தது. ""கேளுங்கள், அப்பொழுது பெறுவீர்கள்,"" அது முடிந்தது. ""என் நாமத்தினாலே நீங்கள் பிதாவிடம் எதைக் கேட்டாலும், நான் அதைச் செய்வேன்."" அது முடிந்தது; அது என்றென்றைக்கும் உள்ளது. அந்த வார்த்தை வெளிப்படுத்தப்பட்டுள்ளது. " "நீங்கள் சொல்கிறீர்கள், ""அது இயேசு.""" "தேவன் சொன்னார், ""இவர் என்னுடைய நேசகுமாரன், இவருக்குச் செவிகொடுங்கள்."" அவரிடம் வார்த்தை இருந்தது." "18 நான் நேற்றிரவு சொன்னது போல, தீர்க்கதரிசி சொன்னார், ""கர்த்தர் உரைக்கிறதாவது, கர்த்தர் உரைக்கிறதாவது."" ஆனால் இயேசு சொன்னார், ""நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்."" கர்த்தர் உரைக்கிறதாவது என்று அல்ல, அவரே கர்த்தராக இருந்தார். ""ஆதியிலே வார்த்தை இருந்தது; அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது; அந்த வார்த்தை தேவனாயிருந்தது. அந்த வார்த்தை மாம்சமாகி நமக்குள்ளே வாசம்பண்ணினார்."" அவர் வார்த்தையாக இருந்தார்." இப்போது, அது எவ்வளவு பூரணமாக இருந்தது என்பதைக் கவனியுங்கள். உலகம் தோன்றுவதற்கு முன்பே, இயேசு அடிக்கப் பட்டிருந்தார். அவர் உலகம் தோற்றமுதல் அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியானவர் என்று பைபிள் சொல்கிறது. அவர் எப்படி அடிக்கப் பட்டார்? தேவன் வார்த்தையைப் பேசிய அதே நிமிடத்தில், அது என்றென்றைக்கும் தீர்க்கப் பட்டுவிட்டது. விதை விதைக்கப்பட்டது, அது நிறைவேறியே ஆகவேண்டும் (பாருங்கள்), ஏனென்றால் அவரால் கலப்படமற்ற சத்தியத்தைத் தவிர வேறெதையும் பேச முடியாது. பாருங்கள்? அவ்வளவுதான். 19 அவர் உலகம் தோற்றமுதல் அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டி என்று சொல்லப் பட்டிருந்தால், தேவன் அந்தச் சிந்தனையை உணர்ந்துகொண்ட அதே கணம்தான் அது. அந்தச் சிந்தனை தேவனாலேயே உருவாக்கப் பட்டது. தேவன் ஒரு சிந்தனையை உருவாக்கும் ஒவ்வொரு முறையும், அது ஒரு படைப்பு; அவர் அதைப் பேசும்போது, அது ஒரு நிஜமாக மாறுகிறது. எனவே இந்த பைபிளின் ஒவ்வொரு வார்த்தையும் தேவனுடைய பேசப்பட்ட படை ப்புச் சிந்தனையாகும். ஒவ்வொரு முறையும் அது நல்ல நிலத்தில் ஏற்றுக் கொள்ளப் படும்போது, அது வெளிப்படுத்தப்படும். ஆமென். அப்பொழுது எல்லா பயங்களும் விலகும், ஒவ்வொரு நிழலும் நகரும், நாம் நங்கூரமி டப்பட்டு நிற்போம்; அப்போது எதுவுமே உங்களை அசைக்க முடியாது. பாருங்கள்? எல்லா மூடநம்பிக்கைகளும் ஏற்றத்தாழ்வுகளும் அப்போது கடந்துபோய்விடும்; நாம் வார்த்தையின் மேல் சரியாக இருக்கிறோம். தேவன் அந்த வார்த்தையைக் கனப்படுத் துவதைத் தவிர வேறு எதையும் செய்ய முடியாது. அவர் அதைக் காத்துக்கொள்ள வேண்டும்; அது அவரே. வார்த்தை தேவன். அது அப்படித்தான் என்று பைபிள் சொன்னது. அது தேவனுடைய நித்திய, மாறாத வார்த்தை. அவர் எவ்வளவு பூரணமானவர் என்பதை அறியும்போது, அவரால் இந்த நெருக்கடியில் இந்த வழியில் செயல்பட்டுவிட்டு, பின்னர் திரும்பி அதை மறுத்து, அதே நெருக்கடியில் வேறு வழியில் செயல்பட முடியும்? "20 ஒரு நபர் இரக்கத்திற்காக அழும்போது அவர் இந்த வழியில் செயல்பட்டு அவர்களைக் குணமாக்குகிறார், அவர்களுடைய விசுவாசம் அவரை நோக்கிப் பார்க்கிறது, அவர்கள் கலப்படமற்ற தூய விசுவாசத்துடன் அவரை நம்புகிறார்கள், ""உன்னால் விசுவாசிக்கக் கூடுமானால் நீ குணமாவாய்"" என்ற அந்தத் தகுதியை அவர் கேட்கிறார். " "ஆனால் பின்னர் இங்கே திரும்பி வந்து, இந்த மனிதர், ""ஆண்டவரே, என் இருதயம் உமக்குத் தெரியும், நான் உம்மை நம்புகிறேன்,"" என்று சொல்லும்போது அதைச் செய்ய மாட்டேன் என்றால், அவரால் தேவனாயிருந்து அப்படிச் செய்ய முடியாது. " அவர் இங்கே செயல்பட்டது போலவே அங்கும் செயல்பட வேண்டும், இல்லை யென்றால் அவர் இங்கே செய்தது தவறு. அவர் தவறு செய்திருந்தால், அவர் தேவன் இல்லை. அதோ அங்கே இருக்கிறீர்கள். அவர் வழுவா தவர் இல்லை. அப்படியானால் அவர் நம்மைப் போலவே இருப்பார்-நாம் இருப்பதைப் போல. """சரி, நான் அந்த வழியில் செயல்பட்டேன், ஆனால் அங்கே நான் ஒரு தவறு செய்து விட்டேன்"" என்று சொல்ல வேண்டியிருக்கும். பாருங்கள்? ""ஆனால் நான் இங்கே அந்தத் தவறைச் செய்யமாட்டேன்."" பாருங்கள், தேவன் அப்படிச் செய்துவிட்டு தேவனாய் இருக்க முடியாது. அவர் என்றென்றும் தேவனாய் இருக்க வேண்டும். பாருங்கள்? " அவர் என்றென்றும் மாறாதவராக இருக்க வேண்டும். ஒவ்வொரு முறையும் அவர் ஒரே மாதிரியாகச் செயல்பட வேண்டும். அவர் அப்படியே செய்கிறார். அவர் அப்படிச் செய்கிறார் என்பதை நான் மீண்டும், மீண்டும், மீண்டும் நிரூபிக்கப்பட்டதைக் கண்டிருக்கிறேன். "21 இப்போது, கடைசி நாட்களில் கள்ளத் தீர்க்கதரிசிகள் எழும்புவார்கள், பொய்யான அடையாளங்கள் எழும்பும் என்று பைபிள் சொன்னது. ""மிருகம் வந்து, உலகம் தோற்ற முதல் (எங்கே?) ஆட்டுக்குட்டியானவருடைய ஜீவபுஸ்தகத்தில் பெயர் எழுதப்படாத பூமியில் குடியிருக்கிற அனைவரையும் வஞ்சிக்கும்"" என்று அவர் சொன்னார். ஆமென். " அவன் எப்படி வஞ்சிக்கப்போகிறான்? உலகம் தோற்றமுதல் ஜீவபுஸ்தகத்தில் பெயர் எழுதப் பட்டவர்களை அவனால் வஞ்சிக்க முடியாது. அதே தேவன் பேசினார், கிறிஸ்து உலகம் தோற்றதற்கு முன்பே சிலுவையில் அறையப் பட்டார், அதே தேவன் அந்நேரத்தில் உங்களை அழைத்தார், உங்கள் பெயரைப் புத்தகத்தில் எழுதினார். ஆமென். நான்... இப்போது, அது-அது அப்படி இருக்காது என்பது போல் தோன்றலாம், ஆனால் அது பைபிள், எனவே அது அப்படித்தான் இருக்க வேண்டும். பாருங்கள்? "22 ""எவர்களை அழைத்தாரோ, அவர்களை நீதிமான்களுமாக்கினார்: எவர்களை நீதிமான்க ளாக்கினாரோ, அவர்களை மகிமைப் படுத்தியு மிருக்கிறார்."" அது சரி. பாருங்கள்? இங்குதான் நாம் கிருபையையும் கிரியைகளையும் போட்டுக் குழப்பிக் கொள்கிறோம். ஆர்மீனியன் மற்றும் கால்வினிச நம்பிக்கையில் முழு விஷயமும் இங்கே இருக்கிறது. கிருபை என்பது தேவன் உங்களுக்காகச் செய்வது; கிரியைகள் என்பது நீங்கள் தேவனுக்காகச் செய்வது. பாருங்கள்? உங்களை தேவனிடம் கொண்டு வருவது கிருபைதான்; நீங்கள் தேவனுக்காகச் செய்வது கிரியைகள். பாருங்கள்?" "இப்போது, ஆபிரகாம் தேவனை விசுவாசித் தபடியால், அவன் விசுவாசத்தினாலே நீதிமா னாக்கப் பட்டான். பவுல் அவனை விசுவாசத் தினால் நீதிமானாக்குகிறார்; யாக்கோபு மறுபக்கத்தில் கிரியைகளினால் அவனை நீதிமானாக்குகிறார். ஆனால் பவுல் தேவன் கண்டதைப் பற்றிப் பேசினார், யாக்கோபு மனிதன் கண்டதைப் பற்றிப் பேசினார். நீங்கள் ஒரு விசுவாசி என்று சொல்லிவிட்டு, பின்னர் நீங்கள் சொல்வதற்கு முரணாக நடந்து கொண்டால், நீங்கள் ஒரு விசுவாசி அல்ல. பாருங்கள்? நீங்கள் தேவனிடம், ""ஆம், நான் இப்போது உறுதியாக நம்புகிறேன்"" என்று சொல்கிறீர்கள். சகோதரனே, நீங்கள் நம்புவதைப் போலவே செயல்படுவதைத் தவிர வேறு எதையும் செய்ய முடியாது. அது சரி. நீங்கள் சொல்கிறீர்கள், ""ஆண்டவரே, என் கை முடங்கி யிருக்கிறது, ஆனால் என்னைச் சுகமாக்கிய கர்த்தர் நீரே என்று என் இருதயத்தில் ஏதோ ஒன்று சொல்கிறது. ஓ, நான் அதை என் முழு இருதயத்தோடும் நம்புகிறேன், தேவனே."" அந்தக் கை ஒவ்வொரு நாளும் சில அங்குலங்கள் அசைவதை கவனிப்பதைத் தவிர உங்களால் வேறு எதுவும் செய்ய முடியாது. பாருங்கள், அதுதான் விஷயம். உங்களால் வேறு எதுவும் செய்ய முடியாது. பாருங்கள்? தேவன் அந்த வார்த்தையை நிறைவேற்றக் கடமைப் பட்டிருக்கிறார்." 23 ஆரம்பத்தில் தேவன்... உதாரணமாக, முற்பிதாவாகிய யாக்கோபை எடுத்துக் கொள்வோம். அவன் ஒரு நாடோடிப் பையன்; அவன் ஓடிப்போன பையன்; ஏசாவைக் கொன்றுவிடுவானோ என்று பயந்து அவன் வீட்டை விட்டு ஓடிப்போனான், அவன் செய்த ஏதோ ஒன்றினிமித்தம் ஏசா அவனைக் கொன்றுவிடுவான் என்று பயந்தான். அவன் வீட்டை விட்டு ஓடிப்போனான். ஆனாலும் அந்தப் பையன் ஆபிரகாமுக்குக் கொடுக்கப் பட்ட தெய்வீக வாக்குறுதியினால் தேவனில் நங்கூரமிடப்பட்டிருந்தான். அது சரி. "யாக்கோபுக்குள் நங்கூரமிடப்பட்டிருந்த அதே வாக்குறுதி, இன்றிரவு மறுபடியும் பிறந்த ஒவ்வொரு விசுவாசியிலும் நங்கூரமிடப் பட்டுள்ளது. நீங்கள் அதைப்பற்றி ஒன்றும் செய்யாமலே தேவன் இறையாண்மையுடன் அழைக்கிறார்; நீங்கள் செய்தது ஒன்றுமில்லை. மனிதர்கள் சொல்கிறார்கள், ""ஓ, நான் தேவனைத் தேடினேன்."" எந்த மனிதனும் எந்த நேரத்திலும் தேவனைத் தேடவில்லை. " "ஆனால் தேவன் மனிதனைத் தேடுகிறார், மனிதன் தேவனைத் தேடுவதில்லை, தேவன் மனிதனைத் தேடுகிறார். இயேசு சொன்னார், ""என் பிதா ஒருவனை இழுத்துக் கொள்ளாவிட்டால், ஒருவனும் என்னிடத்தில் வரமாட்டான்."" உங்களுக்குப் புரிகிறதா? தேவன் மனிதனை இழுப்பதாக இருக்க வேண்டும்." "24 மனிதன் தனது சுபாவத்தில் ஒரு தள்ளப் பட்டவன். அவன் அந்நியன்; அவன் தேவனை விட்டு விலகி இருக்கிறான். அப்படியானால் தேவன் கிருபையினால் அவனைத் தம் பக்கமாக இழுக்க வேண்டும். ""பிதாவானவர் எனக்குக் கொடுக்கிற யாவும் என்னிடத்தில் வரும்."" எந்த வழியிலும் இல்லை, உங்களை தேவனை விட்டு விலக்கி வைக்க நாட்டில் போதுமான சினிமாக்களோ, போதுமான நடனக் கூடங்களோ, போதுமான களியாட்டங்களோ இல்லை. தேவன் இழுக்க ஆரம்பிக்கும்போது, உலகம் தோன்றுவதற்கு முன்பே அவர் உங்கள் பெயரை எழுதியபோது நீங்கள் வருவீர்கள் என்று எழுதியிருந்தார், நீங்கள் வருகிறீர்கள், அவ்வளவுதான்; அவ்வளவுதான்." "ஓ, நீங்கள் ஒரு மாயக்காரனாக இருந்து, இது, அது, அல்லது மற்றொன்றைச் சொல்லலாம், ஆனால் தேவன் அழைக்கும் போது என்று நான் அர்த்தப்படுத்துகிறேன். அது சரி. தேவன் அழைக்க ஆரம்பிக்கும்போது, நீங்கள் நின்று, ""சரி, நான் ஒரு கிறிஸ்தவன்; இந்தக் காரியங்கள் என்னைத் தொந்தரவு செய்யாது"" என்று சொல்லமாட்டீர்கள். நீங்கள் அப்படி இல்லை என்பதை அது காட்டுகிறது." "25 நான் எப்படி... நான் என் மனைவியிடம் ஒரு உறுதிமொழி எடுத்திருந்தால், ""மனைவியே, நான் உன்னை என் முழு இருதயத்தோடும் நேசிக்கிறேன்; என் வாழ்நாள் முழுவதும் நான் உனக்கு உண்மையாக இருப்பேன்."" " பிறகு நான் எப்படி மனசாட்சியோடு வெளியே சென்று, நான் அதை அர்த்தப் படுத்தியிருந்தால், அவளுக்கு அவமானத்தை உண்டாக்க முடியும்? என்னால் அதைச் செய்து விட்டுத் தப்பித்துக் கொள்ள முடிந்தாலும், நான் போய் அவளுக்குத் துரோகம் செய்துவிட்டு, அதிலிருந்து தப்பித்துக் கொள்ள முடிந்தாலும். ஏன், நான் அவளை நேசிக்கவில்லை என்று அர்த்தம். என்னால் அதைச் செய்ய முடியாது. நான் எதற்காகவும் அவளைப் காயப் படுத்தமாட்டேன். அவள் என் மனைவி. நான் அவளை நேசிக்கிறேன். வாய்ப்பு எப்படி இருந்தாலும், நான் அவளை நேசிப்பதால் அதைச் செய்யமாட்டேன். பாருங்கள்? "இப்போது, தேவனோடு அப்படித்தான் இருக்கிறது. நீங்கள் தேவனிடம் வந்து, அவரை உங்கள் முழு இருதயத்தோடும் உண்மை யிலேயே நேசித்து, ""சரி, நான் ஒரு கிறிஸ்தவன். தேவனுக்கு மகிமை, நான் கிறிஸ்துவில் நங்கூரமிடப் பட்டிருக்கிறேன். இதைச் செய்வதால் எனக்கு ஒன்றும் ஆகாது. " "எப்படியும் தேவன் என்னை மன்னிக்கிறார்"" என்று சொன்னால். நீங்கள் தேவனை நேசிக்கவில்லை என்பதை அது காட்டுகிறது. ஏதோ தவறு இருக்கிறது என்பதை அது காட்டுகிறது. நான் எதற்காகவும் அவரைப் புண்படுத்தும் எதையும் செய்ய விரும்பமாட்டேன். நான் அவருக்கு எந்தத் துக்கத்தையும் ஏற்படுத்த விரும்ப வில்லை. அவர் என் பிதாவாக இருப்பதால் அவர் புன்னகைக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்." 26 நான் மெக்சிகோவிற்குச் சென்றபோது... மறுநாள் நான் மனைவிக்கு ஒரு சிறிய பரிசைக் கொண்டு வந்தேன், அது அமெரிக்கப் பணத்தில் பதினைந்து சென்ட்க்கு மேல் இருக்காது. ஆச்சரியம், அந்த கண்கள் மின்னியதையும், அவள் முகத்தில் ஒரு பெரிய புன்னகை வந்ததையும் நான் பார்த்தேன், அவள் என்னைக் கட்டிப்பிடித்துக்கொண்டாள். ஆச்சரியம், அது எந்த பதினைந்து சென்ட்க்கும் மேலான மதிப்புடையது. பாருங்கள்? ஏன்? நான் அவளை நேசிக்கிறேன்; அவள் அதைச் செய்ய வேண்டும் என்று நான் விரும்புகிறேன்; என்னைப் பற்றி அவள் அப்படி உணர வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அவளைப் பற்றி நானும் அப்படித்தான் உணருகிறேன். "அதுவேதான் இங்கேயும், ஆனால் தேவனுக்கு முன்பாக ஒரு மில்லியன் மடங்கு பெரியது. நான் ஏதாவது செய்ய விரும்புகிறேன், அவருடைய முகத்திற்கு நேராக நடந்து சென்று... இல்லை, நான் அவரிடம் சொல்ல வேண்டியதில்லை, நான் அவருக்கு உண்மை யாக இருக்கிறேனா இல்லையா, அவரை விட எதையாவது-அவரை விட அதிகமாக நேசிக்கிறேனா இல்லையா என்பது அவருக்குத் தெரியும். அவர் அதைத் தெரிந்துகொண்டு செயல்பட வேண்டும் என்று நான் விரும்புகிறேன். பின்னர் அவர் என்னை அனுமதிக்கும் எங்காவது நான் ஒரு பெரிய எழுப்புதல் கூட்டத்தை நடத்தி, அநேக ஆத்துமாக்களைக் கொண்டு வரும்போது, அல்லது வியாதிப்பட்ட, பாதிக்கப்பட்ட யாராவது சுகமடையும்போது. யாராவது ஊருக்குள் சென்று, ""ஓ, நான் ஒரு காலத்தில் முடமாக இருந்தேன், இப்போது என்னைப் பாருங்கள்; நான் நலமாக இருக்கிறேன்"" என்று சொல்லும்போது. " "ஓ, அவர் தம் கைகளை என் மேல் வைத்து, ""அது அற்புதம்"" என்று சொல்வதை உணர நான் விரும்புகிறேன். நான் சொல்வது உங்களுக்குப் புரிகிறதா?" அது நல்லது. அது... நீங்கள் ஒரு கிறிஸ்தவராக இருக்கும்போது இதைச் செய்ய ஏங்குவீர்கள். நீங்கள் அதைச் செய்ய விரும்பு கிறீர்கள். அதைச் செய்ய ஆசைப்படுகிறீர்கள். அப்படியானால், அதைச் செய்வதற்கான ஞானத்தைத் தரும்படி தேவனிடம் ஜெபிப்பதே செய்ய வேண்டிய காரியம், அவர் உங்களுக்காக என்ன செய்வார் என்பதை அறிந்து கொள்ளுங்கள். 27 இப்போது, யாக்கோபு, ஒரு நாடோ டியாக, வாக்குறுதி இருந்தும் அவன் தன் உயிருக்காக ஓடினான். சரி, எப்படியும் அவன் கொல்லப்பட்டிருக்க மாட்டான். தேவன் அவனோடு இருந்தார். காடுகளின் வழியாக ஓடி, களைப்படைந்து, ஏசா வருகிறானா என்று பார்க்கத் திரும்பிப் பார்த்து, உங்களுக்குத் தெரியும், பயந்து, பதட்டமாக, எங்காவது குதிரைக் குளம்புகளின் சத்தத்தைக் கேட்க முடியுமா என்று ஆச்சரியப்பட்டு, ஏசா... யாக்கோபு, மிருகங்கள் தன்னைத் தாக்காதபடி ஒருவேளை தன் சிறிய ஈட்டியை வைத்துக்கொண்டு, தன்னுடைய கிழிந்த பழைய கோட்டுடன் காடுகளின் வழியாகத் தன்னால் முடிந்தவரை வேகமாக ஓடி, ஒரு பெரிய உயரமான மலையின் மேல் ஏறினான், அப்போதுதான் அவன் வெகுதூரம் பார்த்து யாக்கோபு (ஏசா) எங்காவது வருகிறானா என்று பார்க்க முடியும். 28 மாலையில் சூரியன் மறைந்து கொண்டிருந்தது, அந்தப் பரிதாபத்திற்குரிய சிறிய மனிதன் களைப்படைந்திருந்தான், அதனால் அவன் சில பாறைகளை ஒன்றாக உருட்டி வைத்து ஓய்வெடுக்கப் படுத்தான். கவனியுங்கள், அவன் ஒரு பரவச நிலையில் (trance) விழுந்தான். தேவன் தமது ஊழியரோடு பேசிக்கொண்டிருந்தார், ஏனெனில் அவருடைய ஊழியர் நீதிமானாக இருந்ததினால் அல்ல, ஆனால் தேவன் ஒரு வாக்குறுதியைக் கொடுத்திருந்தார்... ஆமென். யாக்கோபு அதைப் பெற்ற விதத்தைப் பாருங்கள். ஆனால் தேவன் ஒரு வாக்குறுதியைக் கொடுத்திருந்தார், அதைக் காப்பாற்ற வேண்டியிருந்தது. யாக்கோபின் இடுப்பில் ஆசீர்வதிக்கப்பட்ட நீதியின் வித்து இருந்தது, அது ஈசாக்குக்கு ஆபிரகாம் மூலமாக வாக்களிக்கப்பட்ட விதையின்படி அங்கிருந்து வரவிருந்தது. யாக்கோபின் இடுப்பில் அந்த வித்து இருந்தது, அது பல நூற்றாண்டுகள் அல்லது தலைமுறைகள் கழித்து வந்தாலும், அங்கே அந்த வாக்குறுதி இருந்தது. 29 தேவன் யாக்கோபை அழைத்து அவனுக்கு எதிர்காலத்தின் சிலவற்றைக் காட்டினார், அவன் வாக்குறுதிக்குச் சுதந்தரவாளி என்பதை அறிந்து, அவன் அதற்குத் தகுதியானவன் என்பதால் அல்ல, தேவன் அதை வாக்களித்திருந்தார் என்பதால். உங்களுக்கு உரிமை இருக்கிறது என்பதால் அல்ல, நீங்கள் செய்த ஏதோ ஒன்றினால் அல்ல, ஆனால் தேவன் உங்களுக்கு அதே வகையான வாக்குறுதியைக் கொடுத்திருக்கிறார். ஏனெனில் நாம் கிறிஸ்துவுக்குள் மரித்திருக்கும்போது, நாம் ஆபிரகாமின் சந்ததியை அணிந்துகொண்டு, வாக்குறுதியில் ஆபிரகாமோடு உடன் சுதந்தரவாளிகளாக இருக்கிறோம். இப்போது, நீங்கள் ஒரு சுதந்தரவாளியாக இருப்பதற்கான ஒரே வழி, நீங்கள் உங்களுக்கு மரித்து, கிறிஸ்துவாகிய ஆபிரகாமின் சந்ததியை அணிந்துகொள்வதுதான்; கிறிஸ்து பரிசுத்த ஆவியானவர் மூலமாக மட்டுமே வர முடியும். அது சரி. பின்னர் நீங்கள் அதே வாக்குறுதிக்குச் சுதந்தரவாளியாக, ஒரு யாத்திரிகராக (கவனி யுங்கள்), ஒரு யாத்திரிகராகவும் அந்நியராகவும், ஒரு நகரம் வரப்போவதைத் தேடுகிறீர்கள், அதன் சிற்பியும் உண்டாக்கினவரும் தேவனே, தங்கியிருந்து, அலைந்து திரிகிறீர்கள். ஆமென். அதோ அங்கே இருக்கிறீர்கள். யாத்திரிகன், ஆனால் இருண்ட வானம் மற்றும் மேக மூட்டமான வானிலை வழியாக உறுதியாகப் பார்த்து, அதற்கு அப்பால், தேவனை, மேலே உள்ள தமது பெரிய ஆளுகையில், அதிகாரத்தில் இருக்கிற தேவனைப் பார்க்கிற விசுவாசம்... 30 சிறிய ஸ்தேவான் மரித்துக் கொண்டி ருந்தான். இயேசு மகிமைப்படுத்தப்பட்டு, அங்கே மகத்துவத்தின் வலது பாரிசத்தில் அமர்ந்திருந்தார். அவர்கள் அவனைக் கற்களால் அடிக்க ஆரம்பித்தார்கள், அவன் தலை கற்களால் நசுக்கப்பட்டுக் கொண்டிருந்தது. ஸ்தேவான் பரலோகத்தை நோக்கி உறுதியாகப் பார்த்தான். இயேசு, தமது வேலையை முடித்த பிறகு, தேவனுடைய வலது பாரிசத்தில் அமர்ந்திருந்தார். ஆனால் ஸ்தேவான், வானங்கள் திறந்திருப் பதையும், இயேசு தேவனுடைய வலது பாரிசத்தில் நிற்பதையும் கண்டான். இரட்சகர் தமது சிங்காசனத்திலிருந்து எழுந்து நின்று, அந்த இரத்தசாட்சிக்கு உள்ளே வர வரவேற்பு அளித்திருப்பார் என்று நான் ஊகிக்கிறேன். ஆம், அவன் மேலே தேவனுடைய நித்திய ஆளுகை யைக் கண்டான். தேவனுடைய வாக்குறுதி உண்மையானது. அவனைப் பாருங்கள். இப்போது, நாம் யாக்கோபை எடுத்துக் கொள்வோம்; அவன் படுக்கிறான்; தேவன் அவனைத் தனிமைப்படுத்தி, ஒரு தரிசன மயக்கத்திற்குள் கொண்டு செல்கிறார்; அவன் மேலே பார்த்து, பரலோகத்தில் தேவனுடைய சிங்காசனத்தில் கட்டப்பட்டு, பூமி வரை எட்டிய ஒரு ஏணியைக் கண்டான், தேவதூதர்கள் அந்த ஏணியில் ஏறுவதையும் இறங்குவதையும், மேலும் கீழும் செல்வதையும் கண்டான். "31 இப்போது, இது ஒரு அழகான வாக்குறுதி என்பதை நாம் எல்லா வருடங் களிலும் காண்கிறோம், தேவன் தப்பித்துச் செல்ல ஒரு வழியை, ஏறுவதற்கு ஒரு ஏணியை, ஒரு உறுதியான அஸ்திபாரத்தை வாக்களித் திருந்தார். தேவன் அதை வாக்களித்திருந்தார். ஆனால் அது மகிமையில் தேவனுடைய சிங்காசனத்துடன் இணைக்கப்பட்டிருந்தது. ஆனால் பூமியில் அதை இணைப்பதற்கு அவர் எங்கே ஒரு இடத்தைக் கண்டுபிடிப்பார்? அவர் ஒருமுறை அதை யூத தேசத்தின் மீது இணைக்க முயன்றார். அவரால் அதைச் செய்ய முடியவில்லை என்பதைக் கண்டார். அவர் என்ன செய்யப்போகிறார் என்பது அவருக்கு எப்போதும் தெரியும், ஏனென்றால் அவர் வித்தை வாக்களித்திருந்தார், அந்த வித்து அப்போது யாக்கோபுக்குள் இருந்தது. ஆனால் அவரால் அதை எத்தனாகிய யாக்கோபின் மீது இணைக்க முடியவில்லை, ஆபிரகாமின் மீதும் இணைக்க முடியவில்லை. அங்கே பின்வாங்கிப் போன ஒரு சிறிய மனிதன், சிறிய தந்திரக் காரன், பொய் சொல்லி, தன் மனைவியை அவன் நடத்திய விதம், அவரால் அதன் மேல் அதை இணைக்க முடியவில்லை. அவரால் அதை வேறு பல காரியங்களின் மீதும் இணைக்க முடியவில்லை. அவரால் அதை ஆலயத்தின் மீதும் இணைக்க முடியவில்லை. இயேசு சொன்னார், ""ஒரு கல்லின் மேல் ஒரு கல் இராத காலம் வரும்."" அவர் அதை முற்பிதாவாகிய தாவீதின் மீது முயன்றார், அவன் பத்சேபாளை மனைவியாகக் கொண்டான். உரியாவைக் கொன்றான். பாருங்கள்? அவர் எதனுடன் அதை இணைக்க முயன்றாரோ, அது நங்கூரமிடவில்லை." "32 ஓ, அல்லேலூயா. ஆனால் தீர்க்கதரிசி சொன்னார், ""சீயோனில் ஒரு கல், விலையேறப் பெற்ற கல், சோதிக்கப்பட்ட கல் வைக்கப் படும்."" அதுதான் நங்கூரமாக இருக்கும். ஆம், ஒரு அற்புதமான கல்... பின்னர் தேவன், பரலோகத்தில் தேவனாக இருந்து, ஏணியைத் தமது சொந்த சிங்காசனத்தில் இணைத்து, அதை வேறொருவர் மீதும் அல்ல, மூலைக்கல்லாகிய மனுஷகுமாரன், இயேசு கிறிஸ்துவின் மீதும் இணைத்தார். தேவன் தமது ஏணி நழுவி விழுவதை விரும்பவில்லை. அவர் அதை ஆதாமோடு ஒரு உடன்படிக்கையில் இணைக்க முயன்றார்; அவன் அதை உடைத்தான். அவர் அதை... உடன்படிக்கையில் இணைத்தார், உடைத்தான்." ஆனால் தேவன் நிபந்தனையற்ற உடன்படிக் கையைச் செய்தார், அதை அவர் கிறிஸ்து இயேசுவுக்குள் இணைத்தார். அங்கே அது நங்கூரமிடப்பட்டுள்ளது; அங்கே சறுக்குவதோ நழுவுவதோ இல்லை; விலகிச் செல்ல வழியில்லை. அது என்ன? அது மேலே தேவராலும், கீழே தேவகுமாரனாலும் இணைக்கப் பட்டுள்ளது. அது என்னவென்றால், அது ஒரு பாதை, அது பூமியிலிருந்து மகிமைக்குச் செல்லும் ஒரு பயணியின் வழி. நீங்கள் தோற்றுப்போக முடியாது. பாருங்கள், அங்கே தேவதூதர்களின் பெரிய கூட்டங்கள் இங்கே மேலும் கீழும் ஏறியும் இறங்கியும், களைத்தவர்களையும் வியாதிப்பட்டவர்களையும் தூக்கி, அவர்கள் சரீரங்களைக் குணமாக்கி, தரிசனங்களையும் வல்லமையான அடையாளங் களையும் அற்புதங்களையும் காட்டுகிறார்கள். தோற்க முடியாது. அது சறுக்க முடியாது; அது நழுவ முடியாது. நீங்கள் பாதுகாப்பாக இருக்கிறீர்கள். தேவன் அப்படிச் சொன்னார்; அது என்றென்றைக்கும் தீர்க்கப்பட்டது. "33 அது பரலோகத்து தேவனுடைய இருத யத்தைச் சுற்றிலும் இணைக்கப்பட்டுள்ளது, இங்கே கீழே தேவகுமாரனைச் சுற்றிலும் இணைக்கப்பட்டுள்ளது, நாம் அதற்குள் கொண்டு வரப்பட்டிருக்கிறோம். தேவகுமாரன் மூலமாக நாம் அவரிடம் ஏறுகிறோம். ஆமென். ஓ, ஆச்சரியம். அப்படியென்றால் நீங்கள் எதைக் குறித்து பயப்படுகிறீர்கள்? நமது வாக்குறுதி தேவனுக்கும் கிறிஸ்துவுக்கும் இடையில் இணைக்கப்பட்டுள்ளது, நாம் அவர்களுக்கு இடையில் இருக்கிறோம், தேவதூதர்களுடன், அவர் சொன்னார், ""தம்முடைய தூதர்களுக்கு உன்னைக் குறித்துக் கட்டளையிடுவார்."" அவருக்குப் பயந்தவர்களைச் சுற்றிலும் தேவனுடைய தூதர்கள் பாளையமிறங்கி யிருக்கிறார்கள். " "நாம் இந்த அஸ்திபாரத்தை அமைத்து, ஒவ்வொரு நாளும் உயர உயர ஏறி, ஒவ்வொரு நாளும் என்னை ஒரு படி மேலே, மேலே கொண்டு வந்து, நான் மேலே, மேலே, மேலே செல்லும்போது, வழியெல்லாம் மேலும் கீழுமாக... ஏதாவது நடந்தால், நான் வழியில் விழுந்தால் அல்லது எனக்கு ஏதாவது நேரிட்டால், என்னைத் தூக்கிவிட அங்கே ஒரு பெரிய தூதர்களின் கூட்டம் நிற்கிறது. ""வாருங்கள், நாம் சீயோனை நோக்கி, மேலே உள்ள அந்த அழகான நகரத்திற்கு அணிவகுத்துச் செல்வோம்.""" 34 தோற்க முடியாது, அதில் தோல்வியே இல்லை. அது நான் செய்வதைச் சார்ந்திருக்க வில்லை; அவர் செய்ததையே சார்ந்திருக்கிறது. ஆமென். அது ஏற்கனவே முடிந்துவிட்டது. விசுவாசி ஒருமுறை கிறிஸ்து இயேசுவுக்குள் நங்கூரமிடப்பட்டு, அங்கே பின்னால் வாசல் வழியாக வந்து, இந்த நெடுஞ்சாலையில் வைக்கப்பட்டால், தேவதூதர்கள் உங்களைப் பராமரிக்க, அதைக் கொண்டு தேவனிடம் நேராக மேலே செல்வதைத் தவிர வேறு எந்த வழியும் உங்களுக்குக் கிடைக்காது. தேவன் இதற்கு ஒரு வழியை உண்டாக்கினார். ஆரம்பத்தில், நமது முதல் பெற்றோரின் வீழ்ச்சியில் அவர் கண்டபோது, அவர் ஆதாமோடு செய்த உடன்படிக்கையை அவர் கண்டார்; அவர் ஏணியை அவனுக்குள் இணைக்க முயன்றார், அது தோல்வியடைந்தது. பின்னர் அவர் தமது சொந்த குமாரனைக் கீழே கொண்டு வந்து, அதை அவரோடு இணைப்பதைத் தவிர அவரால் அதை இணைக்க வேறு எதுவும் இல்லை. எனவே இப்போது அது தோற்க முடியாது. எனவே நாம் எதைக் குறித்துக் கவலைப்படுகிறோம்? எதைக் குறித்துக் குழம்புகிறோம்? நாம் ஏன் பெரிய நீண்ட முகத்துடன் செல்கிறோம்? நாம் மேலே பார்த்துப் புன்னகைப்போம். மேலே பாருங்கள், புன்னகைப்பது மட்டுமல்ல, சிரிக்கவும் செய்யுங்கள், சிரிப்பது மட்டுமல்ல, எல்லா இடங்களிலும் பரிசுத்த கைகளை உயர்த்தி, தேவனுக்குத் துதியையும் மகிமையையும் செலுத்துங்கள், ஏனென்றால் அவருடைய வாக்குறுதிகள் ஆம் என்றும் ஆமென் என்றும் இருக்கின்றன, ஆம் மற்றும் இல்லை என்று அல்ல, ஆம் மற்றும் இல்லை என்று அல்ல, ஆனால் ஆம். அதில் இல்லை என்பது கிடையாது. ஆம். 35 நமது அஸ்திபாரம் உறுதியாக நிற்கிறது. தேவனுடைய அஸ்திபாரம்... தேவன் சீயோனில் மூலைக்கல்லை வைத்தார். இதோ நாம் இருக்கிறோம், சறுக்க முடியாது, நழுவ முடியாது, அசைய முடியாது. பின்னர் நாம் வாசலுக்குள், கிறிஸ்துவின் மூலமாக வருகிறோம், இங்கே வைக்கப்படுகிறோம். ஓ, நமக்கு ஏற்றத்தாழ்வுகள் இருக்கலாம்; அது உண்மைதான், வியாதிகள் மற்றும் பிரச்ச னைகள். ஆனால் நினைவில் கொள்ளுங்கள், வழியெல்லாம் தேவதூதர்களின் ஒரு பெரிய கூட்டம் இருக்கிறது, எந்த நேரத்திலும் உங்களைத் தாங்கும். நீங்கள் விழும்போது உங்களை மேலே கொண்டு செல்லும். ஓ, ஆம், அவர் அங்கே இருக்கிறார். அவர் அதை வாக்களித்தார். அவர் அதற்கு ஒரு வழியை உண்டாக்க வேண்டியிருந்தது. "எனவே அவரால் உண்டாக்க முடிந்த ஒரே வழி மூலைக்கல், விலையேறப்பெற்ற கல், சோதிக்கப்பட்ட கல், தெரிந்துகொள்ளப்பட்ட கல். ""கர்த்தருடைய நாமம் பலத்த துருகம்: நீதிமான் அதற்குள் ஓடிச் சுகமாயிருப்பான்."" அது சரி. பாதுகாப்பு, இனி எதுவும் உங்களைத் தொந்தரவு செய்ய முடியாது. நீங்கள் கன்மலையில் இருக்கிறீர்கள். இப்போது நீங்கள் பிடித்துக் கொண்டிருக்கிறீர்களா என்பது அல்ல; கன்மலை பிடித்துக் கொண்டிருக்கிறதா என்பதுதான் விஷயம். கன்மலை ஏற்கனவே பிடித்துக் கொண்டது, எனவே நீங்கள்-நீங்கள் பாதுகாப்பாக இருக்கிறீர்கள். எதுவும் உங்களைத் துன்புறுத்த முடியாது, தேவன் அனுமதித் தாலன்றி எதுவும் உங்களுக்கு வர முடியாது." 36 வழியில் ஏதாவது நடந்தால், சோத னையும் பரீட்சையும் வந்தால், நீங்கள்-உங்கள் சோதனை, நீங்கள் செல்லும்போது குழந்தைப் பயிற்சி, நினைவில் கொள்ளுங்கள், அவருடைய தூதர்கள் உங்களைத் தாங்குவார்கள், ஆறுதல் படுத்த தூதர்கள், உங்களுக்கு விசுவாசத்தைக் கொடுக்க தூதர்கள், உங்களை முன்னெடுத்துச் செல்ல தூதர்கள். தேவன் ஏணியில் மேலும் கீழும் ஒரு தூதர்களின் கூட்டத்தை வைத்திருக்கிறார். இப்போது, அவர் இதற்கு ஒரு வழியை உண்டாக்க வேண்டியிருந்தது. அவர் அதை கிறிஸ்துவின் மூலமாக உண்டாக்கினார். இப்போது, கிறிஸ்து... தேவன் ஒரு வாக்குறுதியை அளிக்கும் ஒவ்வொரு முறையும், அவர் அந்த வாக்குறுதிக்கு ஒரு வழியை உண்டாக்க வேண்டியிருந்தது. இப்போது, உன்னிப்பாகக் கவனியுங்கள், நோவாவிடம் அவர் உலகத்தை அழிக்கப்போவதாகவும், ஆனால் அவனைக் காப்பாற்றப்போவதாகவும் சொன்னபோது... இப்போது, தேவன் நோவாவைக் காப்பாற்றுவதற்கு முன்பு, அவர் அவனுக்காக இரட்சிப்பின் ஒரு வழியை உண்டாக்க வேண்டியிருந்தது. எனவே தேவன் அவனை ஒரு படகைக் கட்டச் செய்து, அதை உள்ளும் புறமும் கீல் பூசச் செய்தார். அவன் எப்படி அந்த கொப்பர் மரத்தை (gopher wood) எடுத்தான், மிகவும் மெல்லிய, லேசான மரம்; அது பால்சம் மரத்தை விட லேசானது... ஓ, அது சரிசெய்யப்படும்போது அது மிகவும் லேசாக இருக்கும், ஒரு பெரிய மரக்கட்டையை நீங்கள் தூக்கினால், அதில் கடினமானது ஒன்றுமில்லை, ஏனென்றால் அது அவ்வளவு லேசானது. 37 ஆனால் பின்னர் நீங்கள் அதை என்ன செய்கிறீர்கள் என்றால், அவர்கள் வெளியே சென்று வேறொரு மரத்திலிருந்து கொஞ்சம் கீல் (pitch) எடுத்து வருகிறார்கள். அவர்கள் அதை மிகக் கடினமாக அடிக்கிறார்கள். இப்போது, நீங்கள் அந்தக் கொப்பர் மரத்தை அப்படியே தண்ணீரில் போட்டால், அது சில நிமிடங் களிலேயே தண்ணீரை உறிஞ்சி மரித்துவிடும், அல்லது-அல்லது மூழ்கிவிடும்-நீருக்குள் அமிழ்ந்து விடும். அது அந்த வழியில் இருந்தால்... ஆனால் நீங்கள் பார்க்கிறீர்கள், தேவன் சுவிசேஷப் பிரசங்கத்தின் பைத்தியக்காரத் தனத்தை எடுத்துக்கொள்கிறார், அவர் பலவீ னமான மற்றும் தாழ்மையான மக்களை எடுத்துத் தமது வல்லமையைக் காட்டுகிறார். பெரிய கல்வி கற்றவர்களை வெட்கப்படுத்த அவர் கல்வியறிவில்லாதவர்களை எடுத்துக் கொள்கிறார். ஞானிகளை வெட்கப்படுத்த அவர் எளிமையான காரியங்களை எடுத்துக்கொள்கிறார். "எனவே அவர் இந்த பழைய கொப்பர் மரத்தை இங்கே எடுத்துக்கொள்கிறார், அது மிகவும் லேசாகவும் பால்சம் போலவும் இருந்தது... நீங்கள் அந்தப் பொருளைத் தண்ணீரில் வைத்தால், அவர்கள் சொல்வார்கள், ""ஐயோ, அது இப்போதே மூழ்கிவிடும்"". சரி, இப்போது அவர்கள் அப்படித்தான் சொல்கிறார்கள், ""இப்போது, அந்தக் கும்பலால் என்ன செய்ய முடியும், அல்லது இது என்ன சொல்லும்?"" அந்த விமர்சனங்களை நீங்கள் கேட்டிருக்கிறீர்கள்." "38 ஆனால் அது மிதக்கத் தயாராவதற்கு முன்பு, தேவன் சொன்னார், ""இன்னும் எல்லாம் முடியவில்லை. இப்போது, நீ போய் கொஞ்சம் கீல் எடுத்து வந்து இதில் ஊற்று"". அந்தச் சூடான கீல் இந்த உண்மையான மென்மையான பால்சமிற்குள் ஊற்றப்பட்டபோது, அது உறைந்து, எஃகு போலக் கடினமானது. ஒரு மரக்கட்டை அதன் மீது மோதினால், அதைத் தள்ளிவிட்டுவிடும். " அது அப்படித்தான் இருக்கிறது, ஒரு சிறிய பலவீனமான, கல்வியறிவில்லாத, படிப்பறி வில்லாத நபர் இயேசு கிறிஸ்துவிடம் வரும்போது, அவர் அப்படித்தான் இருக்கிறார், ஒரு லேசான பால்சம் மரத்துண்டு போல. ஆனால் தேவன் பரிசுத்த ஆவியானவரை அங்கே ஊற்றி, அந்த மனிதரை முத்திரையிட்டு மூடுகிறார், நரகத்திலுள்ள எந்தப் பிசாசுகளாலும் அவரை மோதித் தள்ள முடியாது. அது சரி. தேவன் அதைச் செய்தார். அவர் ஒரு வழியை உண்டாக்குகிறார். 39 இப்போது, அவர் ஒரு வழியை உண்டாக்க வேண்டியிருந்தது. ஒரு வழி இருக்கப்போகிறது என்று அவர் நோவாவுக்கு வாக்குறுதி அளித்திருந்தால், அவர் நோவா வுக்குத் தப்பித்துச் செல்ல ஒரு வழியை உண்டாக்கினார். அவர் வித்தைப் பாதுகாக்க விரும்பினால் அவர் ஒரு பேழையை உண்டாக்க வேண்டியிருந்தது. தேவன் ஒரு வழியை உண்டாக்குகிறார்... "தீர்க்கதரிசியாகிய தானியேல், தானியேல் பிரச்சனையில் இருந்தபோது அவன் தேவனுக்கு உண்மையாக நின்றான்; அவன் சொன்னான், ""தேவனே, நான் உமது வார்த்தையை நம்புகிறேன்."" அவர்கள் சொன்னார்கள், ""தேவனே, அவன் அந்தப் பரிசுத்த ஆலயமாகிய எருசலேமை நோக்கிப் பார்த்து ஒரு நாளைக்கு மூன்று வேளை ஜெபம் பண்ணினான். ஒவ்வொரு காலையும் அவன் ஜன்னல்களைத் திறந்து ஆலயத்தை நோக்கி ஜெபம் பண்ணினான்"". பின்னர் தானியேல் ஒரு இடத்திற்குள் சிக்கிக்கொண்டான், தேவன் இன்னும் அவனோடு கிரியை செய்து முடிக்கவில்லை, அவர்கள் அவனைச் சிங்கங்களின் குகையில் எறிந்தார்கள்." இப்போது, தேவன் அவனுக்காக ஒரு வழியை உண்டாக்க வேண்டியிருந்தது. தேவன் ஒரு வழியை உண்டாக்குவார். அவர் ஒரு வழியை உண்டாக்கியே ஆக வேண்டும். எனவே அவர் தானியேலுக்குத் தப்பித்துச் செல்ல ஒரு வழியை உண்டாக்கினார். அவர் உடனடியாக ஒரு தூதனை அவனிடம் அனுப்பினார். அவன் எப்படியும் ஏணியின் மேல் இருந்தான். எனவே அவர் அவனுக்குத் தப்பித்துச் செல்ல ஒரு வழியை உண்டாக்கினார். அவர் ஒரு பெரிய வெளிச்சத்தை, ஒரு நெருப்பை அங்கே கீழே அனுப்பினார், அக்கினி ஸ்தம்பத்தைப் போல, மிருகங்கள் நெருப்பைக் கண்டு பயப்படும், எனவே அது பின்வாங்கி ஓடின. சிங்கங்கள் அவனைத் துன்புறுத்தவில்லை, ஏனென்றால் தானியேலைச் சுற்றி இந்தப் பெரிய அக்கினி ஸ்தம்பம், சுழல்கிற வெளிச்சம், எல்லா நேரமும் அவனைச் சுற்றிலும் இருந்தது. எனவே சிங்கங்களால் அவனை நெருங்க முடியவில்லை. அவர் தானியேலுக்குத் தப்பித்துச் செல்ல ஒரு வழியை உண்டாக்கினார். 40 ஏனோக்கு, ஏனோக்கு, ஜலப்பிரளய அழிவுக்கு முந்தைய உலகத்திற்கு முன்பு, அவர் ஒரு முன்னடையாளத்தைக் காட்ட விரும்பினால், ஏனோக்கு சாகக்கூடாது என்று அவர் விரும்பினால் அவர் எப்படிச் செய்ய முடியும்?. அவர் அவனுக்காக ஒரு மறுரூபத்தை உண்டாக்க வேண்டியிருந்தது. எனவே தேவன் அவனுக்காக ஒரு எடுத்துக்கொள்ளப்படுதலை (rapture) உண்டாக்கினார். ஏனோக்கை ஒரு முன்னடையாளமாக மாற்றுவதற்காக தேவன் அதைச் செய்ய வேண்டியிருந்தது. அது சரி. "எலியா மரிக்கும் நிலை வந்தபோது, அவர் ஏற்கனவே அதில் தமது முன்னடையாளத்தைக் காட்டியிருந்தார், எனவே அவர் ஒரு வழியைக் காட்ட வேண்டியிருந்தது. எனவே எலியா கடந்து சென்று, மேலே எடுத்துக்கொள்ளப்பட இருந்தபோது, தேவன் அவனுக்குத் தப்பித்துச் செல்ல ஒரு வழியை உண்டாக்க வேண்டியிருந்தது. எனவே அவர் அவனுக்காக ஒரு அக்கினி இரதத்தையும் அக்கினிக் குதிரையையும் இறக்கி, அவனை மகிமைக்கு நேராக மேலே கொண்டு சென்றார். தேவன் ஒரு வழியை உண்டாக்கினார். எலிசாவிடம் சொன்னார்கள், ""இன்று உன் தலைவன் எடுத்துக்கொள்ளப்படுவான்,"" தீர்க்கதரிசிகளின் புத்திரர்கள். " "அவன் சொன்னான், ""எனக்குத் தெரியும், நீங்கள் சும்மா இருங்கள்""." 41 அவனுக்குத் தெரிந்திருந்தது. அவர் அதை எப்படிச் செய்யப்போகிறார்? அவர் அப்படியே கீழே வந்து, அவனைத் தூக்கிக்கொண்டார்; அவர் ஒரு வழியை உண்டாக்கினார். தேவன் எப்போதும் ஒரு வழியை உண்டாக்குவார். அவர்கள் பல ஆண்டுகளாக அதற்காக, மேசியாவின் வருகைக்காக, ஆபிரகாமிலிருந்து வரவேண்டிய ஆசீர்வதிக்கப்பட்ட வித்துக்காக எதிர்நோக்கிக் காத்திருந்தார்கள். அவர்கள் அதைத் தெளிவாகவும் நேராகவும் கவனித் தார்கள். அவர் அங்கே கீழே பிறந்தபோது, மக்கள் வார்த்தையின் மேல் மிகவும் சடங்காச்சாரமாகி, தேவனுடைய கற்பனைகளை அவமாக்கி, மனுஷருடைய பாரம்பரியத்தைக் கைக்கொண்டார்கள், இன்றைக்குச் செய்திருப் பதைப் போலவே செய்தார்கள். அவர்கள் தேவனுடைய வார்த்தையை ஏற்றுக் கொள்வ தில்லை. தேவனுடைய வார்த்தை தெய்வீக சுகத்தைப் போதிக்கிறது. தேவனுடைய வார்த்தை இயற்கைக்கு அப்பாற்பட்டதைப் போதிக்கிறது. விசுவாசிக்கும் மக்களுக்கு தேவனுடைய வார்த்தை ஒரு வாக்குறுதியை அளிக்கிறது. ஆனால் இன்று, அறிஞர்கள் அதை விளக்கி நிராகரிக்க முயற்சிக்கிறார்கள். ஆனால் அது அதை அகற்றிவிடாது. தேவன் வாக்குறுதியை அளித்தார். உண்மைகளை நேருக்கு நேர் சந்தியுங்கள்; அதை நம்புவதற்கு உங்களுக்குப் போதுமான விசுவாசம் இல்லை; அவ்வளவு தான். ஆனால் தேவன் வாக்குறுதியை அளித்தார். தேவன் அப்படிச் சொன்னார். 42 எனவே இயேசு வருவார் என்று அவர் வாக்குறுதி அளித்தபோது, அவர்கள் அதைப் புரிந்து கொள்ளத் தவறினார்கள். அவர் தாழ்மையாகப் பிறப்பார் என்றும், அவர் எப்படிக் கழுதைக்குட்டியின் மேல் ஏறி வருவார் என்றும், அதுபோன்ற காரியங்களையும் பைபிள் தெளிவாகச் சொன்னது. அவர் வாக்குறுதி அளித்தபோது வேதவாக்கியங்கள் நிறைவேறின, ஏனென்றால் தேவன் ஒரு வழியை உண்டாக் கினார். அந்தக் குழந்தையைப் பெற்றெடுக்க அவர் ஒரு கன்னிகையை வைத்திருந்தார். அவர் அந்த எல்லா காரியங்களையும் தயாராக வைத்திருந்தார், ஏனென்றால் அவர் அதைப் பேசியிருந்தார். அவர் அதைப் பேசும்போது, அவர் தமது வார்த்தையைக் காப்பாற்றியே ஆக வேண்டும். ஆமென். ஓ, ஆச்சரியம். நீங்கள் அதை மட்டும் காண முடிந்தால், அது உங்களுக்கு எளிதாகிவிடும். பாருங்கள்?. தேவன் ஒரு வாக்குறுதியை அளிக்கும்போது, அவர் அந்த வாக்குறுதியில் நிலைத்திருக்க வேண்டும் என்பதை நீங்கள் கண்டுகொண்டால் போதும். அவரால் அந்த வாக்குறுதியை விட முடியாது. பாருங்கள்? "ஷாத்ராக், மேஷாக் மற்றும் ஆபேத்நேகோ எரியும் சூளைக்குள் சென்றபோது, அவர்கள் சொன்னார்கள், ""எங்கள் தேவன் எங்களைத் தப்புவிக்க வல்லவராயிருக்கிறார். ஆகிலும், நாங்கள் அவருடைய வார்த்தைக்கு முரணாக எதையும் செய்யமாட்டோம். நாங்கள் நேராக அதற்குள் நடப்போம்"". தேவன் தப்பித்துச் செல்ல ஒரு வழியை உண்டாக்கினார். அவர் தாமே கீழே வந்து, அக்கினியைத் தென்றலாக வீசச் செய்தார் (பாருங்கள்), அவர்களுடன் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு, போய் விட்டார். ""நானே வழி."" அவர் ஒவ்வொரு முறையும் ஒரு வழியை உண்டாக்கியே ஆக வேண்டும். ஏனென்றால் அவர் அதை வாக்களித்தார்; ""நான் உன்னை விட்டு விலகுவது மில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை"". அவர் தமது வாக்குறுதியைக் காப்பாற்றியே ஆக வேண்டும். அவர் அதைச் செய்யும் விதம் அதுதான்." 43 எனவே கிறிஸ்து வருவார் என்று அவர் வாக்குறுதி அளித்தபோது, அவர்கள் அதை நம்பினார்கள். கிறிஸ்து வந்தபோது, எனக்குத் தெரிந்தவரை இந்த ஏணிக்கு அவரே சிறந்த பதிலாக இருக்க வேண்டும். ஒருமுறை அவர் ஒருவரிடம் பேசினார், அவர் ஒரு இஸ்ரவேலர், அவரில் கபடேதுமில்லை. பிலிப்பு அவரிடம் வந்து இரட்சிக்கப் பட்டபோது, அவன் வெளியே போய் நாத்தானியேலைக் கூட்டிக்கொண்டு வந்தான். அதை அளந்து பார்த்தால், அன்றைய தினம் இயேசு பிரசங்கித்துக் கொண்டிருந்த இடத்தி லிருந்து, மலையைச் சுற்றி, பல மைல்கள் தாண்டிச் செல்ல வேண்டியிருந்தது, அங்கே அவன் நாத்தானியேல் ஒரு மரத்தின் கீழ் ஜெபித்துக் கொண்டிருப்பதைக் கண்டான். "இதோ தேவகுமாரன் நின்றார்; மக்கள்... அநேகர் அதை நம்பவில்லை. ஏழை மக்கள் அதை நம்பினார்கள்; ஏழை மக்கள் அவரை ஏற்றுக் கொண்டார்கள்; அவர்கள் அதை நம்பினார்கள். அவர்கள் இயற்கைக்கு அப்பாற் பட்டதை நம்பினார்கள். ஆனால் வைராக்கிய மானவர்கள், விறைப்பானவர்கள், ""சீ, இது மனதை வாசிக்கும் வித்தை. இது..."" பாருங்கள், அவர்கள் அதை நம்பவில்லை. அவர்கள் வார்த்தையை நம்புவதாக அறிக்கை செய்தார்கள், ஆனால் தங்கள் பாரம்பரியத்தின் வழியில் அதை நம்புவதற்கும், தேவன் அதை எழுதிய வழியில் அதை நம்புவதற்கும் வித்தியாசம் இருந்தது, அவை இரண்டும் வெவ்வேறு காரியங்கள். தேவன் வாக்களித்த வழியில்தான் இயேசு வந்தார்." 44 இதோ அவர் இங்கே நின்றார், தாழ்ந்த நிலையிலுள்ள ஒரு மனிதர், ஒரு மனிதனாகப் பிறந்தவர், தன் வாழ்நாளில் ஒரே ஒரு அங்கியை வைத்துக்கொண்டு, ஏழையாக, தலை சாய்க்கவும் இடமில்லாமல் நின்றார். இவர் எப்படி மேல்தட்டு மக்களின் தேவனாக இருக்க முடியும்? நீங்கள் பார்க்கிறீர்களா? அப்படி இருக்க முடியாது. ஆனால் அவர் ஏழைகளின் தேவனாக இருந்தார். அவரை விசுவாசிப்பவர் களுக்கு அவர் தேவனாக இருந்தார். "அவர் அங்கே நின்றார். நாத்தானியேல், அவன் மிகவும் உற்சாகமடைந்தான், அல்லது பிலிப்பு, அவன் மலையின் பின்புறமாகச் சுமார் நான்கு அல்லது ஐந்து மைல்கள் சுற்றிச் சென்று, நாத்தானியேல் ஒரு மரத்தின் கீழ் ஜெபித்துக் கொண்டிருப்பதைக் கண்டுபிடித்தான். எனவே அவன் ஜெபித்து முடிக்கும் வரை காத்திருந்தான். அவன் எழுந்தபோது, இவன் சொன்னான், ""நாங்கள் யாரைக் கண்டோம் என்று வந்து பார், யோசேப்பின் குமாரனாகிய நசரேத்தூரானாகிய இயேசு""." "அவன் சொன்னான், ""இப்போது, நசரேத் திலிருந்து ஏதாகிலும் நன்மை வரக்கூடுமோ"". " "அவன் அவனுக்குச் சிறந்த பதிலை அளித்தான் என்று நான் நினைக்கிறேன், அவன் சொன்னான், ""நீ வந்து பார்"". அதைச் செய்வதுதான் சிறந்தது." "அவர்கள் சொல்கிறார்கள், ""அந்தப் பழைய கால இருதயப்பூர்வமான மதத்தில் ஏதேனும் அர்த்தம் இருக்கிறதா?"" " """வந்து பார்"". அதுதான் சிறந்தது. ஒருமுறை அதைப் பெற்றுக்கொள்ளுங்கள், பிறகு நீங்களே நியாயந்தீருங்கள்." 45 நான் சிறு பையனாக இருந்தபோது, நாங்கள் நீச்சலடிக்கச் செல்வோம். நான் எப்பொழுதும் அவர்கள் எல்லாரையும் விட மிகக் குறைந்த ஆடைகளையே-குறைந்த ஆடைகளையே அணிந்திருப்பேன், என்னிடம் ஒரு... கோடைக்காலத்தில் நாங்கள் ஒரு ஜோடி ஓவர் கோட் (overalls) அணிந்திருப்போம், என் தலைக்கு மேல் ஒரு தீவனக் கட்டுக்கம்பியைக் (fodder-twine) கட்டியிருப்பேன், இங்கே பொத்தானுக்குப் பதில் ஒரு ஆணி இருக்கும்... நாங்கள் அனைவரும் வயல் வழியாக ஓடுவோம், பையன்களே, யார் முதலில் உள்ளே குதிப்பது என்று போட்டி. அவர்களில் ஏறக்குறைய எல்லோரும், அவர்கள் காலணிகளைக் கழற்ற வேண்டியிருக்கும்; என்னிடம் காலணிகள் இல்லை. அவர்கள் சட்டை கழற்ற வேண்டியிருக்கும்; என்னிடம் சட்டை இல்லை. அதனால் நான் செய்ய வேண்டியது என்னவென்றால், இந்த ஒரு ஆணியை மட்டும் பிடுங்கிவிட்டால் போதும், நான் உள்ளே செல்லத் தயாராக இருந்தேன். நாம் கிறிஸ்துவிடம் அப்படித்தான் வர வேண்டும் என்று நான் நினைக்கிறேன் (அது சரி.), அநேக பாரம்பரியங்களை கீழே வைக்காமல், ஒரே ஒரு ஆணியைப் பிடுங்கிவிட்டு உள்ளே குதிக்க வேண்டும்; அவ்வளவுதான். ஆமென். 46 எனவே நான் ஆணியைப் பிடுங்கினேன், ஆடைகள் காற்றில் நின்றன, ஆடைகள் தரையில் விழுவதற்கு முன்பே நான் தண்ணீருக்குள் இருந்தேன், எங்களால் முடிந்த அளவு வேகமாக ஓடினோம். எனக்கு முடிவெட்டக்கூட வசதியில்லை, முடி என் கண்களை மறைக்க நான் மேலே வருவேன்; தண்ணீர் நன்றாக இருக்கிறதா இல்லையா என்று அவர்கள் அறிய விரும்புவார்கள். அவர்கள் தங்கள் காலணிகள் மற்றும் காலுறைகள் மற்றும் காரியங்களைக் கழற்ற அமர்ந்திருப்பார்கள். நான் ஒரு விரலை உயர்த்தினால் அது குளிர்ச்சியாக இருக்கிறது, இரண்டு விரல்கள் என்றால் நன்றாக இருக்கிறது. "சரி, சகோதரரே, நான் ஒருமுறை வேறொரு தண்ணீருக்குள் இறங்கினேன். நான் உங்களுக்கு ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன்; அது இரட்சிப்பின் தண்ணீர். நான் இரண்டு விரல்களை உயர்த்துகிறேன்; அது நல்லது, உள்ளே வந்து ஒருமுறை முயன்று பாருங்கள். அது சரி. உள்ளே வாருங்கள்; பயப்பட வேண்டாம்; நேராக உள்ளே குதியுங்கள். உங்கள் பாரம்பரியங்கள் அனைத்தையும் கீழே வைத்துவிட்டு, களைந்துவிட்டு, நேராக உள்ளே வாருங்கள். ""என் கைகளில் நான் ஒன்றும் கொண்டு வரவில்லை, வெறுமையாய் உமது சிலுவையை மட்டுமே பற்றிக்கொள்கிறேன்."" அது நல்லதா இல்லையா என்று வந்து பாருங்கள்; உள்ளே குதியுங்கள்." 47 இப்போது, இந்த வழியில் அவர்களுக்கு என் வார்த்தை மட்டுமே இருந்தது, ஆனால் ஒருமுறை தண்ணீரில் இறங்கியதும், அவர்கள் தாங்களே தெரிந்துகொண்டார்கள். இப்போது, இந்த வழியில் உங்களுக்கு என் வார்த்தை மட்டுமே உள்ளது, ஆனால் ஒருமுறை பலிபீடத்திற்குச் செல்லும் அந்த மரத்தூள் பாதையில் (sawdust trail) வந்து, கிறிஸ்து இயேசுவுக்குள் ஒரு பழைய கால தேவபக்தி நிறைந்த அனுபவத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள், பழைய கால மார்க்கத்தில் ஏதோ ஒன்று இருப்பதை நீங்களே அறிந்துகொள்வீர்கள். சரி. "ஆகவே-அவர் ஒரு வழியை உண்டாக்குவது போல. ஸ்தேவான் சுற்றிச் சென்றான், அவன் இப்போது ஒரு வழியை உண்டாக்க விரும்பினான். ஸ்தேவான்... மன்னிக்கவும். நாத்தானியேலை இயேசுவிடம் கொண்டு வர பிலிப்புதான் தேவனுடைய வழியாக இருந்தான். அவன் மலையைச் சுற்றித் திரும்பி வந்தபோது, அவனைச் சுற்றிக்கொண்டு வந்து, ""ஓ, அவர் அற்புதமானவர். உங்கள் மனதில் உள்ள எண்ணத்தை அவர் அறிகிறார்"" என்றான். " """அப்படியா?""" "48 ""ஆமாம்! ஓ, நீங்கள் அங்கே போய் விசுவாசித்து நின்றால், நான் சொல்கிறேன், தீர்க்கதரிசிகளின் காலத்திற்குப் பிறகு நீங்கள் ஒருபோதும் கண்டிராத காரியங்களை நீங்கள் காண்பீர்கள்"". கடைசித் தீர்க்கதரிசி மரித்து பல நூறு ஆண்டுகளாக, இஸ்ரவேலில் திறந்த தரிசனங்கள் இல்லை. அவன் சொன்னான், ""இப்போது..."" மல்கியா மரித்ததிலிருந்து, தீர்க்கதரிசிகள் இல்லை... அவன் சொன்னான், ""நீங்கள் வந்து இந்த மனிதரைப் பாருங்கள். நான் உங்களுக்குச் சொல்கிறேன். அவர் அற்புதமானவர்""." "அவர்கள் பேசிக்கொண்டே வரும்போது, நாத்தானியேல் சொன்னான், ""சரி, நான்... உனக்குத் தெரியும், நான்-நான் மேசியா வரப்போகிறார் என்று நம்புகிறேன். இப்போது, மேசியா வரும்போது, அவர்-அவர் இந்தக் காரியங்களை அறிவார். அவரால் அதைச் செய்ய முடியும்""." """சரி, இவர்தான் மேசியா.""" """அவர் எப்படி மேசியாவாக இருக்க முடியும்?"" பாருங்கள்? ""அவர் எப்படி இருக்க முடியும்?""" """சரி, வந்து பார்"". அதுதான் சிறந்த வழி. வாருங்கள், கண்டறியுங்கள்." "சமாரியப் பெண்ணிடம், இயேசு சிறிது நேரம் பேசிவிட்டு, ""போய் உன் புருஷனை அழைத்துக்கொண்டு வா"" என்று சொன்னபோது உங்களுக்குத் தெரியும்..." "அவள், ""எனக்கு ஒருவருமில்லை"" என்றாள்." "அவர் சொன்னார், ""இல்லை, உனக்கு ஐந்து பேர் இருந்தார்கள்.""" "அவள் சொன்னாள், ""இப்போது, மேசியா வரும்போது எனக்குத் தெரியும்... மேசியா வரும்போது, அவர் இந்தக் காரியங்களைச் செய்வார் என்று நாங்கள் அறிந்திருக்கிறோம், ஆனால் நீர் யார்?""." "அவர் சொன்னார், ""உன்னுடன் பேசுகிற நானே அவர்.""" "49 அது மேசியாவின் அடையாளமாக இருந்தது. பாருங்கள்?. நாத்தானியேலிடமும் அது அப்படியே இருந்தது. அவன் சொன்னான், ""இப்போது, மேசியா-மேசியா இந்தக் காரியங்களைச் செய்வார் என்று எனக்குத் தெரியும்"". " "அவர்கள் மலையைச் சுற்றி வரும் வழியில், இந்த வைராக்கியமான மனிதர், உங்களுக்குத் தெரியும், நடந்து வந்து கொண்டிருந்தார், உங்களுக்குத் தெரியும், பெரிய ஆளாக, இயேசுவுக்கு முன்பாக நடந்து வந்தார். இயேசு திரும்பி அவனைப் பார்த்து, ""இதோ, கபடற்ற ஒரு இஸ்ரவேலன்"" என்றார்." "அவன் சொன்னான், ""ரபீ, என்னை உமக்கு எப்படித் தெரியும்?""" "அவர் சொன்னார், ""பிலிப்பு உன்னை அழைப்பதற்கு முன்னே, நீ அங்கே அந்த மரத்தின் கீழே இருந்தபோது,"" அவர் சொன்னார், ""நான் உன்னைக் கண்டேன்""." "அவன் சொன்னான், ""நீர் தேவனுடைய குமாரன். நீர் இஸ்ரவேலின் ராஜா.""" அவன் நம்பினான்; மேசியாவின் அடையாளம் அவரை அழைப்பதை அவன் அறிந்திருந்தான். அது மேசியாவாகத்தான் இருக்க வேண்டும். மேசியாவைத் தவிர வேறு எதுவும் அதைச் செய்ய முடியாது. இன்றும், மேசியாவைத் தவிர வேறு எதாலும் அதைச் செய்ய முடியாது. மேசியா மேசியாவின் அடையாளத்தை நித்தியத்திலிருந்து நித்தியத் திற்கு எடுத்துக்கொண்டார். அவர் தோல்வி யடைய முடியாது; அவர் மாறாதவராக இருக்க வேண்டும். அது அப்படித்தான் இருக்க வேண்டும். எவ்வளவு வித்தியாசம்... "50 இப்போது, பாருங்கள், இயேசுவைப் பாருங்கள். வாக்குறுதியை ஒருபோதும் நழுவ விடாத கல்லாக, தேவனால் விரும்பப்பட்ட மற்றும் வாக்குறுதி அளிக்கப்பட்ட மக்களை என்றென்றும் என்றென்றும் நங்கூரமிடும் இந்தக் கல்லாகத் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள, அவர் சொன்னார், ""நான் உனக்கு இவைகளைச் சொன்னதினாலேயா விசுவாசிக் கிறாய்? இவைகளைப் பார்க்கிலும் பெரியவை களைக் காண்பாய். வானங்கள் திறந்திருப் பதையும், மனுஷகுமாரன் இடத்திலே தேவ தூதர்கள் ஏறுவதையும் இறங்குவதையும் காண்பீர்கள், யாக்கோபின் ஏணியின் மேல் ஏறுவதையும் இறங்குவதையும் காண்பீர்கள்"". ஏனென்றால் அவரே தேவனுடைய நங்கூரம். ஆமென்." "நான் கிறிஸ்து இயேசுவுக்குள் இருக்கும் வரை நான் தேவனில் நங்கூரமிடப் பட்டிருக்கிறேன். ஆமென். தேவதூதர்கள் ஏறுவதையும் இறங்குவதையும், முதலில் மேலே போய்விட்டுப் பிறகு கீழே வருகிறார்கள்... பாருங்கள், அவர்கள் செய்தியை எடுத்துக் கொண்டு, மேலே போய் அதைத் திரும்பக் கொண்டு வருகிறார்கள். ""மனுஷகுமாரன் இடத்திலே ஏறுவதையும் இறங்குவதையும்."" ஏன்? யாக்கோபின் ஏணி எங்கே இருந்ததோ, வாக்குறுதி அளிக்கப்பட்ட வித்து எங்கே இருந்ததோ, அந்த நங்கூரமிடும் இடமாக அவர் இருந்தார், அவர் தேவனுடைய நித்திய வாக்குறுதி அளிக்கப்பட்ட வித்தாக இருந்தார். அவரே அந்த உறுதியான கல், தேவனுடைய சத்தியம் நங்கூரமிடப்பட்ட அந்தப் பூரண அஸ்திபாரம், நரகத்திலுள்ள எல்லா பிசாசு களாலும் வேறு எதினாலும் அதை ஒருபோதும் அசைக்க முடியாது. தேவன் அதை என்றென்றும் நங்கூரமிட்டிருந்தார். ""தேவதூதர்கள் மனுஷ குமாரன் இடத்திலே ஏறுவதையும் இறங்கு வதையும் நீங்கள் காண்பீர்கள்."" ஆமென்." 51 அந்த வாக்குறுதி அளிக்கப்பட்ட வித்து அங்கே இருக்கிறது, இந்த உண்மையான இஸ்ரவேலன், இவர் தேவனுடைய குமாரன் என்பதை அறிந்துகொள்ள மனதாயிருந்தான். ஆம், ஐயா. அவர் வந்தபோது, அவர் ஒரு கன்னிகையின் மூலமாக வந்தார். தேவன் தமது வாக்குறுதியை உறுதியாக்கினார். அவர் தமது வார்த்தையோடு ஒட்டிக்கொண்டார். அதன் ஒவ்வொரு வார்த்தையும் அப்படித்தான் இருக்க வேண்டும்; அவர் தேவனாக இருந்தபடியாலும், வேறு எதுவும் செய்ய முடியாதபடியாலும் அவர் அதைப் பூரணமாக்கினார். அவர் அதனுடன் நிலைத்திருக்க வேண்டியிருந்தது. கவனியுங்கள், அடுத்ததாக அவர் செய்ய வேண்டிய காரியம், சபை அபிஷேகம் பண்ணப் பட்டு வெளியே அனுப்பப்பட வேண்டும். அவர் தமது வாக்குறுதியைக் காப்பாற்றுவதற்கு முன்பு, இந்தச் சபை அபிஷேகம் பண்ணப்படுவதற்கு ஒரு வழியை உண்டாக்க வேண்டியிருந்தது. இயேசுவுடன் நடந்த பிறகு, இயேசுவை அறிந்த பிறகு, வியாதிப்பட்ட வர்களைக் குணமாக்கவும் எல்லாவற்றையும் செய்யவும் வல்லமை பெற்ற பிறகு, அவர்களுக்கு இருந்த இந்த எல்லா ஏற்றத்தாழ்வுகள் மற்றும் காரியங்களுக்குப் பிறகும், இயேசுவுடன் நடந்திருந்தாலும், அவர் தமது சபையை அபிஷேகம் பண்ணி வெளியே அனுப்புவதற்கு ஒரு வழியை உண்டாக்க வேண்டும் என்று அவர் அறிந்திருந்தார். 52 அவர் அவர்களை எருசலேமுக்கு அனுப்பினார். அவர்கள் மேல்வீட்டறைக்குள் சென்று, பலத்த காற்று அடிக்கிற முழக்கம் போல வானத்திலிருந்து சடிதியாய் ஒரு முழக்கமுண்டாகி, அவர்கள் உட்கார்ந்திருந்த வீடு முழுவதையும் நிரப்பும் வரை பத்து பகலும் இரவும் அங்கே தங்கியிருந்தார்கள். தேவன் தமது சபையை அபிஷேகம் பண்ணவும், அதை யுகங்கள் கடந்து, தேசங்கள் கடந்து பரவச் செய்யவும் ஒரு வழியை உண்டாக்கினார். இன்றும், அதே வல்லமையுள்ள மகிமையான சபை சீயோனுக்கு நேராக அணி வகுத்துச் செல்கிறது, அது பரிசுத்த ஆவியின் அபிஷேகத்துடன் மேலும் கீழும் நகர்கிறது, ஒவ்வொரு மலையிலும், எல்லா இடங்களிலும் அடையாளங்களும் அற்புதங் களும் எழுப்புதல் அக்கினியும் எரிகிறது. இது சிகாகோவில் மட்டுமல்ல; அமெரிக்காவில் மட்டுமல்ல; புறஜாதி தேசங்களிலும் இருக்கிறது. எல்லா இடங்களிலும் எழுப்புதல் அக்கினி எரிகிறது, பெரிய அடையாளங்களும் அற்புதங்களும் நிகழ்கின்றன. நாள் சமீபமாயிருக்கிறது, தேவன் தப்பித்துச் செல்ல ஒரு வழியை உண்டாக்கியிருக்கிறார். "53 அவர் யோவேலில் சொன்னார், ""அந்த நாளில் மாம்சமான யாவர் மேலும் என் ஆவியை ஊற்றுவேன்; உங்கள் வாலிபர் தரிசனங்களை அடைவார்கள்: என் ஊழியக்காரர் மேலும் ஊழியக்காரிகள்மேலும் என் ஆவியை ஊற்றுவேன். வானத்திலும் அடையாளங்களைக் காட்டுவேன்,"" பறக்கும் தட்டுகள் (flying saucers) மற்றும் எல்லாம், மேலே வானத்தில் எல்லா விதமான மறைபொருள் அடையாளங்கள். கீழே பூமியில் அடையாளங்கள், சமுத்திரம் கொந்தளிக்கும், சிகாகோவிலும், எல்லா இடங்களிலும் அலைகள் கரையை மோதும், பெரிய சமுத்திரம் கொந்தளிக்கும். மனுஷ ருடைய இருதயம் சோர்ந்துபோகும், திகைப்பும், தேசங்களுக்குள் இக்கட்டுள்ள காலம். ஓ, என்னே. " அந்த நாளில் பெரிய அபிஷேகம் பெற்ற சபை தனது வல்லமைக்கு எழும்ப வேண்டும். இயேசு கிறிஸ்து உள்ளே வரவேண்டும். வெள்ளம் போல் சத்துரு வரும்போது, தேவனுடைய ஆவியானவர் அவனுக்கு விரோதமாக ஒரு கொடியை ஏற்றுவார். இன்று விஞ்ஞானம் தங்கள் வித்தியாசமான காரியங் களையெல்லாம் செய்யும்போது, தேவன் தமது சபைக்குக் காட்ட இயற்கைக்கு அப்பாற்பட்ட அடையாளங்களைக் கீழே அனுப்புகிறார். உங்கள் மனதை உலகத்தின் காரியங்களிலிருந்து விலக்கி மேலே பாருங்கள். நீங்கள் இப்போது ஏணியில் இருக்கிறீர்கள், நீங்கள் மகிமையிலும் பரலோகத்திலும் நங்கூரமிடப்பட்டிருக்கிறீர்கள். 54 ஒரு ஏணிக்கு இரண்டு முனைகள் உள்ளன. ஆமென். ஒன்று தேவனில் நங்கூரமிடப் பட்டுள்ளது; மற்றொன்று கிறிஸ்துவில் நங்கூரமிடப்பட்டுள்ளது. நாம் அதற்கு நடுவில் ஊழியம் செய்யும் ஆவிகளைக் கொண்டுவரும் தேவதூதர்களின் பெரிய கூட்டத்துடனும், இயற்கைக்கு அப்பாற்பட்ட வரங்கள் மற்றும் காரியத்துடனும் பிடி பட்டிருக்கிறோம், நாம் மேலே செல்லும் வழியில் இருக்கிறோம் என்பதை இது உறுதிப்படுத்துகிறது. சரி, நிச்சயமாக, அந்த மக்களால் அதை நம்ப முடியாது; அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்று பாருங்கள். அவர்கள் அங்கே ஹாலந்தின் சதுப்பு நிலச் சேற்றுக்குழிகள் போன்ற மென்மையான மூழ்கும் மணலில் இருக்கிறார்கள். அங்கே உள்ள ஹாலந்து தேசத்தவருக்காக நான் எப்பொழுதும் வருந்துகிறேன்; அவர்கள் தங்கள் வீடுகளைக் கட்டுவதற்குத் தூண்களையும் பெரிய மரக்கட்டைகளையும் ஊற்றி எல்லா வற்றையும் கீழே இறக்க வேண்டியிருந்தது. ஏனென்றால் அது மிகவும் சேறும் சகதியுமாக மென்மையாக இருக்கிறது. பிறகு அந்தப் பழைய வீடு இந்தப்பக்கமாக ஆடுவது போல் தெரிகிறது. கிட்டத்தட்ட எல்லா ஹாலந்து வீடுகளும் அப்படிச் செய்கின்றன, ஏனென்றால் அது சேற்று நிலத்தின் மேல் கட்டப்பட்டுள்ளது. அது மூழ்கும் மணலின் மேல் உள்ளது. "55 மறுநாள் மெக்சிகோ சிட்டியில் நான் நின்றிருந்தேன், அங்கே பெரிய கட்டிடங்கள், பெரிய வானளாவிய கட்டிடங்கள், பல அடிகள் பின்னோக்கி சாய்ந்திருந்தன. அது வருடத்திற்குப் பல அங்குலங்கள் மூழ்கிக் கொண்டிருக்கிறது. அது மூழ்கிக் கொண்டிருக்கிறது. ஆனால் ஓ, சகோதரரே, இன்றிரவு நாம் பயணம் செய்யும் இந்தப் பெரிய பரிசுத்த ஆவி சாலையின் அஸ்திபாரம், யாக்கோபின் ஏணி, தேவனுடைய சிங்காசனத்துடனும், இயேசு கிறிஸ்துவின் இருதயத்துடனும் இணைக்கப்பட்டுள்ளது, நாம் அதற்கு நடுவில் இருக்கிறோம். அல்லேலூயா. அடையாளங்களும் அற்புதங்களும்... விசுவாசிப் பவர்களுக்குத் தேவன் ஒரு வழியை உண்டாக்குகிறார், தமது அடையாளங்களையும் அற்புதங்களையும் காட்டுகிறார். அல்லேலூயா. நீங்கள் அதை நம்புகிறீர்களா?. [சபையார், ""ஆமென்"" என்று சொல்கிறார்கள்] தேவன் பேரில் விசுவாசமாயிருங்கள். அதை நம்பாமல் இருக்காதீர்கள். நாம் ஜெபிப்போம்." 56 பரலோக பிதாவே, நீர் ஏன் இதைச் செய்தீர் என்று எனக்குத் தெரியாது, ஆனால் பார்க்கப்போனால், பரிசுத்த ஆவியானவர் என்னை உடனடியாக நிறுத்தி, நான் வேறு ஏதோ பேசுவதை நிறுத்தும்படி கேட்டுக் கொண்டார். நான் என்ன செய்ய வேண்டும் என்று நீர் விரும்புகிறீர் என்பது எனக்குத் தெரியவில்லை ஆண்டவரே; இதோ நான் நிற்கிறேன். ஆனால் ஒரு காரியம், நான் உமக்கு மிகவும் நன்றி உள்ளவனாயிருக்கிறேன் ஆண்டவரே, நான்-நான் உம்மை அறிந்திருக் கிறேன். உமது ஆவியானவர் அசைவாடுவதை என்னால் உணரவும் சொல்லவும் முடிகிறது என்பதற்காகவும், நீர் இப்போது ஏதோ ஒன்றைச் செய்யப்போகிறீர் என்று அறிவதற்காவும் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். நான்-அதற்காக நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். தேவனே, என் பாவங்களையும் மீறுதல் களையும் நீர் மன்னிக்கும்படி நான் ஜெபிக் கிறேன். இந்தக் கூட்டத்தின் பாவங்களையும் மீறுதல்களையும் மன்னியும். ஓ தேவனே, நாங்கள் தேவனுடைய வாக்குறுதி அளிக்கப் பட்ட பிள்ளைகள் என்பதை உணர்ந்து கொள்வதால் எங்கள் இருதயத்தைத் திறக் கிறோம். நாங்கள் செய்த ஒன்றினாலும் அல்ல, கிருபையினால் மட்டுமே நாங்கள் இரட்சிக்கப் பட்டிருக்கிறோம். ஓ தேவனே, நாங்கள் எப்படிப் பரிசுத்த ஆவியைப் பெற முடியும்? நீர் அப்படி இருக்க வேண்டும் என்று நியமித் திருந்தாலொழிய, இந்த எண்ணெயில் நீர் எப்படி அதை ஊற்றியிருக்க முடியும். நம்பிக்கையில்லாமல், வாக்குறுதியில்லாமல், எதுவும் இல்லாமல் தேவனை விட்டு அந்நியராக இருந்தோம். நாங்கள் உலகத்தில் இருக்கிறோம்; நாங்கள் தேவன் இல்லாமல், கிறிஸ்து இல்லாமல், மரித்து, பாவியின் நரகத்திற்குச் சென்று கொண்டிருக்கிறோம். ஓ, உமது அற்புதமான கிருபை எங்களைத் தெரிந்துகொண்டு, எங்களைத் தூக்கி எடுத்து, இந்த பெரிய காரியங்களை எங்களுக்குக் கொடுத்து, இந்த ஏணியின் மேல் எங்களை அமர்த்தியதற்காகவும், இன்றிரவு நாங்கள் ஒரு பெரிய தூதர்களின் கூட்டத்திற்கு நடுவில் அமர்ந்திருக்கிறோம் என்பதை நாங்கள் அறியும்படி எங்கள் கண்களைத் திறந்ததற் காகவும் நாங்கள் உமக்கு நன்றி செலுத்து கிறோம், ஓ தேவனே, நாங்கள் சீயோனை நோக்கி மேலே அணிவகுத்துச் செல்கிறோம். 57 அது நழுவ முடியாது, நம்மால் விழ முடியாது. ஓ தேவனே, நாங்கள் பைத்தியக் காரர்கள் என்று உலகம் நினைக்கிறது, நாங்கள் விண் வெளியில் நடக்கிறோம். ஆனால் நாங்கள் தாங்கப் பட்டிருக்கிறோம், உயர்த்தப்பட்டிருக் கிறோம். கழுகைப் போல, ஆண்டவரே, நாங்கள் விசுவாசம் மற்றும் மகிமையின் ஒரு எடுத்துக்கொள்ளப்படுதலில் பிடிக்கப் பட்டிருக் கிறோம். எங்களுக்கு ஆவிக்குரிய ஆசீர்வா தங்களை ஊழியம் செய்யவும், வழியில் எங்களுக்கு உதவவும், அங்கே சீயோன் மலையை நாங்கள் பார்க்கும்போது எங்களை உற்சாகப்படுத்தவும் தேவனுடைய தூதர்கள் எங்களுடன் இருக்கிறார்கள். அன்புள்ள பரலோக பிதாவே, இன்றிரவு இந்தக் கூட்டத்தை நீர் ஆசீர்வதிக்கும்படி நாங்கள் ஜெபிக்கிறோம். இன்றிரவு இந்த வார்த்தையை ஆசீர்வதியும், ஒவ்வொரு பாவி யையும் இரட்சியும், ஒவ்வொரு பின்மாற்றக் காரனையும் மன்னியும். தேவனுடைய தூதர்கள் வழியில் இருக்கும் அந்தப் பரிதாபத்திற்குரிய இழந்த பின்மாற்றக்காரனிடம் இறங்கிச் சென்று, அவனைத் தூக்கிவிடும்படி செய்யும். அங்கே பாவத்தின் மூழ்கும் மணலில் வெளியே சென்று, நீர் நீண்ட காலமாக, இவ்வளவு காலமாகப் பேசிக்கொண்டிருக்கும் அந்தப் பரிதாபத்திற்குரிய நபரை இங்கே கொண்டுவாரும். அவனை இங்கே கொண்டு வந்து, கர்த்தராகிய இயேசுவின் இரத்தத்தினால் சுத்திகரித்து, அவனை ஏணியின் மேல் நிறுத்தும், அப்போது தூதர்கள் அவனுக்கு ஊழியம் செய்து, ஆண்டவரே, நாங்கள் மகிமையை நோக்கி நகரும்போது, அவனை ஏணியில் முன்னும் பின்னும், மேலும் கீழும் கொண்டு செல் வார்கள். பிதாவே, அதை அருளும். இன்றிரவு வியாதிப்பட்ட மற்றும் பாதிக்கப்பட்ட அனைவரையும் குணமாக்கும். இந்தக் கூட்டத்தின் மூலம் மகிமை அடைவீராக. இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம். "58 நம் தலைகள் தாழ்த்தப்பட்டிருக்க, இந்த நேரத்தில் இங்கே ஒரு பாவியான ஆணோ பெண்ணோ, ""சகோதரன் பிரான்ஹாம், எப்படியோ இன்றிரவு, நான் அந்த நெடுஞ் சாலையில் இருக்க விரும்புகிறேன். என் நங்கூரம்... எனக்குத் தெரிய வேண்டும், நான் சபைக்குப் போகிறேன், ஓ, ஆமாம். ஆனால் என் சபை மூழ்கும் மணலின் மேல் கட்டப்பட்டிருப்பதை நான் உணருகிறேன். அது மற்றெல்லா கட்டிடங்களையும் போல இடிந்துவிழப் போகிறது; அது கீழே போகப் போகிறது. ஆனால் என் எல்லா பாவங்களையும் முத்தமிட்டு போக்கி, என்னைத் தம்முடைய பிள்ளை என்று அழைக்கிற தேவனுடைய ஆசீர்வாதத்துடன் என் இருதயத்தில் நங்கூரமிடப்பட்ட ஏதோ ஒன்றைக் கொண்டு நான் கட்டப்பட விரும்புகிறேன். நான் அவருக்கு நெருக்கமாக வாழ்கிறேன் என்ற இந்த நிச்சயத்தை நான் பெற விரும்புகிறேன், ஏனென்றால் நான் எப்போது அழைக்கப்படலாம் என்று எனக்குத் தெரியாது. இப்போது என் கைகளை அவரை நோக்கி உயர்த்துவதன் மூலம், நான் இப்போது அவரை என் இரட்சகராக ஏற்றுக்கொள்கிறேன்"" என்று சொல்வீர்களா? " "உங்கள் தலைகள் தாழ்த்தப்பட்டிருக்க, பியானோ வாசிப்பவர் நமக்கு ஒரு சிறிய இசையைத் தருவார், அப்போது நீங்கள் தேவனை நோக்கி உங்கள் கையை உயர்த்தி, ""இப்போது, தேவனிடம் செல்வதற்கான நிச்சயத்தை எனக்கு அளித்துள்ள இயேசு கிறிஸ்துவை, என் பூமிக்குரிய நங்கூரத்தை நான் ஏற்றுக்கொள்கிறேன்"" என்று சொல்வீர்களா?." "59 தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக சகோதரி. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக சகோதரி. தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக மகனே. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. மேலே பால்கனியில் யாராவது? ""நான் இப்போது, சர்வவல்ல தேவனை நோக்கி என் கையை உயர்த்தி, நான் இப்போது என் குற்றமுள்ள ஆத்துமாவை அவரிடம் ஒப்புக்கொடுக்கிறேன், ஆண்டவரே என்னால் செய்ய முடிந்தது அவ்வளவுதான் என்று சொல்கிறேன். நான் கயிற்றை இழுக்கிறேன்; எல்லாவற்றையும் அகற்றி விடுகிறேன்; நான் ஒன்றுமில்லாமல் வருகிறேன், இல்லை. ஆண்டவரே நான் எல்லாவற்றையும் உம்மிடம் விட்டுவிடுகிறேன்; நீர் என்னை உமது அன்பான, ஆறுதலான, குளிர்ச்சியான, இரட்சிப்பிற்குள் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன். இன்றிரவு வறண்டுபோன களைப்படைந்த என் ஆத்துமாவுக்கு உதவும், அப்போது நான் அங்கே இயேசுவைக் காண முடியும், கல்வாரியில் மரித்து என் ஆத்துமாவை தேவனிடம் நங்கூரமிட்டவர் அவரே. நான் என் கைகளை அவரை நோக்கி உயர்த்தும்போது அவர் அதை இப்போது செய்ய வேண்டும் என்று நான் விரும்புகிறேன்""." "தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக சகோதரி. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. வேறொருவர்? அங்கே நாற்காலியில் இருக்கும் ஐயா, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. அங்கே பின்புறத்தில் இருப்பவர், தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. ஆம். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. வேறு யாராவது? தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக சகோதரி. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக சகோதரி. அது நல்லது, ஓ, அது சரி. வந்து அதை நம்புங்கள். தேவன்... நினைவில் கொள்ளுங்கள், அவர்... அது என்ன?. ""சகோதரன் பிரான்ஹாம், நீங்கள் ஏன், 'தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக' என்று சொல்கிறீர்கள்?"" என்று கேட்கலாம்." "60 நான் எதைப் பற்றிப் பேசுகிறேன்?. கிறிஸ்தவர்கள் ஜெபித்துக் கொண்டிருக்கும் போது... நான் எதைப் பற்றிப் பேசுகிறேன்? நீங்கள் உங்கள் முடிவை எடுத்துவிட்டீர்கள். ஏதோ ஒன்று உங்கள் இருதயத்தைத் தட்டியது. அது என்ன? பரிசுத்த ஆவியானவர் உங்கள் இருதயத்தைத் தட்டினார். நீங்கள் களைப் படைந்து தொலைந்து போனதை அறிந்திருக் கிறீர்கள். ""நான் இப்போது அதைத் தீர்த்துக் கொள்கிறேன்"" என்று உங்கள் கையை உயர்த்தினீர்கள். " """என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு, நித்திய ஜீவன் உண்டு.""" "நான், ""தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக"" என்கிறேன். நிச்சயமாக, நான் அதற்கு ""ஆமென்"" சொல்கிறேன். ""தேவன் அந்த நபரை ஏற்றுக் கொள்வாராக, அவர்கள் தங்கள் கையை உயர்த்தியிருக்கிறார்கள்"". " """சகோதரன் பிரான்ஹாம், அதற்கும் இதற்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா?"" என்று கேட்கலாம். எனக்குத் தெரியாது. இயேசுவின் சிலுவை மரணத்தைப் பற்றிக் கூப்பிட்டவர் தாவீது என்பதை நீங்கள் நினைவில் கொள்ளுங்கள். தீர்க்கதரிசிகள் அபிஷேகத்தின் கீழ் பேசியபோது, அது அப்படித்தான் இருந்தது. அது அப்படித்தான் இருக்க வேண்டும். அவர்கள் தேவனுடைய வார்த்தையைப் பேசினார்கள். கை உயர்த்திய அந்தப் பாவிகள் ஒவ்வொருவரிடமும் நான் தேவனுடைய வார்த்தையைப் பேசினால் என்ன?. நான் அதைப் பேசினால் என்ன? நான் செய்தேன் என்று உணர்ந்தேன். நான் அதைப் பேசினால் என்ன? அவர்கள் நங்கூரமிடப் பட்டிருக்கிறார்கள். அது சரி. தேவனுடைய வார்த்தை பேசுகிறது. இந்தத் தரிசனங்களைப் பேசுவது எது? நடக்கும் இந்தக் காரியங்களைச் சொல்வது எது? அதைச் செய்வது எது? தேவன். அவர் கடைசி நாட்களில் இந்தக் காரியங்களை வாக்குறுதி அளித்தார்." "61 ஒரு பின்மாற்றக்காரர், ""சகோதரன் பிரான்ஹாம், நான் வெகுதூரம் அலைந்து திரிந்தேன், ஆனால் இன்றிரவு நான் என் கையை உயர்த்தி, தேவனே, நான் இதை இப்போதே தீர்த்துக்கொள்கிறேன், என்னை ஏற்றுக்கொள்ளும் என்று சொல்கிறேன்"" என்று சொல்வீர்களா?. ஒரு பின்மாற்றக்காரர், கட்டிடத்தில் எங்கிருந்தாலும், தேவனை நோக்கி உங்கள் கையை உயர்த்தி, ""தேவனே, நான் இப்போது வருகிறேன், நான் நம்புகிறேன். நான் இப்போது உம்மை ஏற்றுக்கொள்கிறேன்"" என்று சொல்வீர்களா? கட்டிடத்தில் எங்காவது, ஒரு பின்மாற்றக்காரர்? ஏணியில் மேலும் கீழும், நீங்கள் கீழே விழுந்துவிட்டீர்கள். நீங்கள் விழுந்துவிட்டீர்கள்; நீங்கள் ஏணியை இழக்க வில்லை; நீங்கள் ஒருமுறை கிறிஸ்துவுக்குள் நங்கூரமிடப்பட்டிருந்தால் தேவன் இன்னும் உங்களுடன் இருக்கிறார். நீங்கள் உங்கள் அனுபவத்தை இழக்கலாம், ஆனால் சகோதரரே, தேவன் இன்னும் உங்கள் இருதயத்தில் இருக்கிறார். உங்களால் அதை ஒருபோதும் விட்டுவிட முடியாது." தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக, சீமாட்டியே; நான் உங்கள் கையைப் பார்க் கிறேன். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக; நான் உங்கள் கையைப் பார்க்கிறேன். அங்கே பின்னால் இருப்பவர் தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக; நான் உங்கள் கையைப் பார்க்கிறேன். என் வலதுபுறத்தில் யாராவது? தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. "யாராவது உங்கள் கையை உயர்த்தி, ""நான் ஒரு பின்மாற்றக்காரனாக இருந்தேன் சகோதரன் பிரான்ஹாம், ஆனால் இன்றிரவு தேவனுடைய கிருபையினால்..."" என்று சொல்வீர்களா?." "62 ""நான் என் கையை உயர்த்துவதற்கும் உயர்த்தாமல் இருப்பதற்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது?"" என்று சொல்லலாம். " "ஓ, சகோதரரே, இயேசு சொன்னார், ""மனுஷர் முன்பாக என்னை அறிக்கை பண்ணுகிறவன் எவனோ, அவனை நானும் தேவனுக்கு முன்பாக அறிக்கைபண்ணுவேன்."" இது ஒரு முடிவு; நீங்கள் எடுக்க வேண்டிய ஒன்று. நீங்கள் முடிவுகளை எடுக்க வேண்டும். யாரை உங்கள் மனைவியாக்கப் போகிறீர்கள் என்று நீங்கள் ஒரு முடிவு எடுக்க வேண்டியிருந்தது. காரை வாங்கப் போகிறீர்களா இல்லையா, வீட்டை வாங்கப் போகிறீர்களா இல்லையா என்று நீங்கள் முடிவு எடுக்க வேண்டியிருந்தது. தேவன் உங்களை ஆசீர்வதிப் பாராக ஐயா. நீங்கள் ஒரு முடிவை எடுக்க வேண்டும். நீங்கள் எப்போதாவது ஒரு முடிவை எடுக்க வேண்டும். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக சகோதரி. தேவன் உங்களை ஆசீர்வதிப்பார்; நிச்சயமாக அவர் செய்வார். நான் அதை நம்புகிறேன்." "ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்குச் சொல்லக்கூடிய மிகப்பெரிய வார்த்தை என்ன? ""தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக."" அதுதான். தேவன் என்னை ஆசீர்வதிப்பார் என்றால், நான் பெறக்கூடிய மிகச் சிறந்த காரியம் அதுவே. எனக்கு வேண்டுவதெல்லாம் அதுதான், தேவன் என்னை ஆசீர்வதிக்க வேண்டும்; மற்றதெல்லாம் சரியாகிவிடும்." "63 தேவன் உங்களோடு இருப்பாராக. ஓ, எவ்வளவு அருமை, அநேகர் வந்திருக்கிறார்கள். வேறு யாராவது இப்பொழுதே உங்கள் தீர்மானத்தை எடுத்து, ""இயேசுவே, தேவனு டைய குமாரனே, எனக்கு இந்த அனுபவம் வேண்டும். நான் மறுபடியும் பிறக்க வேண்டும். நான் உம்மைப் பெற்றுக்கொள்ள வேண்டும். எனக்கு இந்த நிச்சயம் வேண்டும். நான் பின்னோக்கிப் போயிருக்கிறேன், ஆண்டவரே; என்னால் எங்கும் செல்ல முடியவில்லை; நான் ஏணியின் மிகக் கீழே இருக்கிறேன்; எதையும் செய்யும்படி நான் ஒருபோதும் உயரே ஏறவில்லை. நான் அலைந்து திரிந்தேன்; பலவிதமான போதகக் காற்றினால் நான் அலைகழிக்கப்பட்டேன், ஆனாலும் நான் உம்மை நேசிக்கிறேன் என்பது உமக்குத் தெரியும். நான் இன்னும் கொஞ்சம் மேலே செல்ல விரும்புகிறேன்; நான் பின்மாற்றம் அடைந்தவன்,"" என்று சொல்வீர்களா?" இஸ்ரவேலர் எகிப்திற்குச் சென்றபோது, அவர்கள் தங்கள் உடன்படிக்கையை ஒருபோதும் இழக்கவில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள்; அவர்கள் தங்கள் ஆசீர்வாதத் தைத்தான் இழந்தார்கள், தங்கள் உடன்படிக் கையை அல்ல. தேவனுடைய உடன்படிக்கை மாறாமல் இருந்தது. ஆம், ஐயா. தேவன் ஏற்கனவே ஆபிரகாமுடன் அதைச் செய்து விட்டார். அவர்கள் எங்கே போனாலும், அது அப்படியே இருக்கிறது. அதுதான் சரி. அது இன்னும் இருக்கிறது. ஆபிரகாமின் சந்ததியாக இருக்க நீங்கள் தேவனால் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கலாம். சரி, இப்போது நீங்கள் விசுவாசியுங்கள். "64 எங்கள் பரம பிதாவே, இன்றிரவு இங்கே அநேக கைகள் உயர்த்தப்பட்டன. தேவனே, தேவனை விட்டு வழிவிலகிச் சென்ற பிள்ளைகள், எங்கேயோ ஒரு சபையில் இணைந்திருப்பதைத் தவிர மேலே எழும்ப முடியாதவர்கள், ஆனாலும் அவர்கள் உம்மை நேசிக்கிறார்கள்; அவர்கள் வருகிறார்கள். அவர்கள் இப்படியே இருந்தால், பெரிய இராணுவத்தில் அவர்கள் எப்போதும் சாதாரண வீரர்களாகவே (private) இருப்பார்கள், ஆனால் அவர்கள் இராணுவத்தில் இருக்கிறார்கள். ஆனால் தேவனே, அதற்கு என்ன பலன்? நாங்கள் மேஜர்களாகவும் ஜெனரல்களாகவும் இருக்க விரும்புகிறோம். பவுல் சொன்னது போல, ""காலத்தைப் பார்த்தால் நீங்கள் போதக ராயிருக்க வேண்டியவர்கள், ஆனால் உங்களுக்குப் போதிக்க ஒருவன் தேவைப்படுகிறான்.""" பிதாவே, நீர் அவர்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிக்கும்படி நாங்கள் ஜெபிக்கிறோம். தேவனே, இன்றிரவு ஏணியில் இன்னும் கொஞ்சம் உயரத்திற்கு அவர்களைக் கொண்டு வாரும். இன்றிரவு அவர்களுக்கு ஒரு விதமான புதிய அனுபவத்தைக் தாரும், அதினாலே நீர் அவர்களை ஆசீர்வதித்தீர் என்பதை அவர்கள் அறிந்துகொள்வார்கள். "65 அஸ்திபாரம் இல்லாத புதை மணலின் மேல் தங்கள் வீட்டைக் கட்டியிருக்கும் இந்த ஏழைப் பாவிகள், அதை பார்க்கும்போது, அது அவர்களுக்குப் பைத்தியக்காரத்தனமாகத் தோன்றுகிறது, ""நான் ஏன் இதைச் செய்தேன்? நான் ஏன் இதைச் செய்கிறேன்? நான் ஏன் குடிக்கிறேன்? நான் ஏன் புகைபிடிக்கிறேன்? நான் ஏன் சூதாடுகிறேன்? நான் ஏன் சபைக்குச் செல்வதில்லை? முழு வீடும் பைத்தியக் காரத்தனமாகத் தெரிகிறது."" " நிச்சயமாக, அது சேற்று நிலத்தின் மீதும், பழைய புதைபாசியின் மீதும் கட்டப் பட்டிருக்கிறது, இந்த நாட்களில் அது எல்லாம் அடித்துச் செல்லப்படப் போகிறது. தேவனே, மனுஷன் அல்ல தேவன் போட்ட அந்த விலையேறப்பெற்ற கல்லினிடத்திற்கு, அந்த உறுையான அஸ்திபாரத்தினிடத்திற்கு அவர்கள் வரும்படியும், இன்றிரவு ஏணியில் ஏறி, ஒரு நல்ல சுதந்திரமான சுவாசத்தின் விடுதலையை உணரவும் செய்யும். ஆண்டவரே, அதை அருளும். "எலிகள் மற்றும் அசுத்தங்கள் நிறைந்த சேறும் சகதியுமான, அழுக்கடைந்த சந்துகளி லிருந்தும், சந்து குப்பைகளிலிருந்தும் வெளியே வந்த பிறகு, அவர்களைச் சீயோன் மலையின் மேல் வைப்பீராக. அல்லேலூயா. இரத்தத்தால் கழுவப்படுவது என்றால் என்ன என்பதையும், எல்லாப் பாவங்களும் இரத்தத்தின் கீழ் இருப்பதையும் அவர்கள் உணரட்டும், பரிசுத்த ஆவியானவர் அவர்கள் மேல் வீசும்போது அந்தச் சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கட்டும், இயேசுவின் அன்பான கரங்கள் அவர்கள் கழுத்தைச் சுற்றிக்கொண்டு, ""என் அலைந்து திரிந்த பிள்ளையே, இன்றிரவு நான் உன்னைக்குறித்து பெருமைப்படுகிறேன்; நீ வீட்டிற்கு வந்துவிட்டாய்,"" என்று சொல்வதை அவர்கள் உணரட்டும். ஆண்டவரே, அதை அருளும். ஒவ்வொருவரும் இரட்சிக்கப் படுவார்களாக." "மேலும் பிதாவே, அதைச் செய்யும் வேளையில், உம்முடைய சுகவீனமான பிள்ளைகள் அநேகர் இங்கே காத்துக் கொண்டிருக்கிறார்கள். நீர் எதையாவது பேசினால், அது நடந்தே தீரும் என்பதை இன்றிரவு அவர்களுக்குக் காண்பிக்க நான் முயற்சித்தேன். அது நடந்தே தீர வேண்டும்; அது நீரேதான். ""நானே உன் பரிகாரியாகிய கர்த்தர்,"" என்று நீர் சொன்னீர். நீர் அவர்கள் ஒவ்வொருவரையும் சுகமாக்கும்படி நான் ஜெபிக்கிறேன். இயேசுவின் நாமத்தில், நான் ஜெபிக்கிறேன். ஆமென்." 66 நீங்கள் உங்கள் தலைகளை நிமிர்த்தும் போது கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. இப்போது, எத்தனை பேர் நன்றாக உணர் கிறீர்கள், எல்லாம் கழுவப்பட்டு சுத்திகரிக்கப் பட்டது போல? உங்கள் கையை... ஓ, என், நன்றாக உணர்கிறீர்கள்... வார்த்தை இறங்கி வந்து என் பாவங்களைச் சுத்திகரிக்கிறது. அது என் எல்லா அசட்டைகளையும் நீக்கி, என்னைப் புதிதாக்குகிறது. ஓ, நான் வீட்டிற்குச் செல்லும் போது, அந்தப் பழைய ஓடை வளைவுக்குத் திரும்பிச் செல்வதை, அங்கே கிடக்கும் மரக் கட்டைகளைக் கடந்து செல்வதை, அந்தச் சிறிய பள்ளத்தாக்குகளின் மேலே ஏறிச் செல்வதை, மலையின் பக்கமாகச் சென்று அங்கே அவருக்கு முன்பாக என் கைகளை உயர்த்துவதை நான் எத்தனை முறை விரும்புகிறேன். ஓ, அவருடைய அழகில் மூழ்குவது எப்படி, அவரை ஆராதிப்பது எப்படி, அவரிடத்தில் எதையும் கேட்காமல், அவரை ரசிப்பது மட்டுமே. யாருக்காவது உதவ முயற்சிப்பது, ஏதாவது செய்வது எனக்கு எவ்வளவு பிடிக்கும். 67 வெகு காலத்திற்கு முன்பு அல்ல, தெற்கே அவர்கள்... நான் எப்போதாவது படித்த இந்தச் சிறிய சம்பவத்தை உங்களுக்குச் சொல்லியிருக்கிறேனா என்று எனக்குத் தெரியவில்லை. அவர்கள் அடிமைகளை வாங்குவது வழக்கம், ஆப்பிரிக்க மக்கள், போயர் இனத்தவர்கள் (Boers) வெகு தெற்கே, ஆப்பிரிக் காவின் தென் முனையில் குடியேறியபோது, அவர்கள் கறுப்பினத்தவரை இங்கே கொண்டு வந்து அடிமைகளாக விற்கவும், அவர்களை அடிமைகளாக்கவும் தொடங்கினார்கள். ஏழை மக்கள் தங்கள் வீட்டை விட்டு வெகுதூரத்தில் இருந்தார்கள், அவர்கள் களைத்திருந்தார்கள். அவர்கள் இனி ஒருபோதும் தங்கள் தாய் தந்தையைப் பார்க்க வீட்டிற்குச் செல்ல முடியாது என்பதை அறிந்திருந்தார்கள். உரிமையாளர்கள் அவர்களைச் சாட்டையால் அடிப்பார்கள், அவர்கள் மிகவும் கொடுமையாக நடத்தப்பட்டார்கள். அவர்கள் அழுதுகொண்டே சுற்றித் திரிவார்கள், வீட்டை விட்டுப் பிரிந்ததினால் மிகவும் சோகமாக இருந்தார்கள். 68 அவர்களுக்கென்று தரகர்கள் இருந்தார்கள், அவர்கள் போய் வெவ்வேறு அடிமைகளை வாங்குவார்கள். அவர்கள் இந்த அடிமை உரிமையாளரிடம் செல்வார்கள், ஒருவேளை அவரிடம் முன்னூறு அடிமைகள் இருக்கலாம். அவர்கள் அவரிடமிருந்து நூறு அடிமைகளை வாங்குவார்கள். அவர்களை இங்கே கொண்டு வந்து, ஒருவேளை ஐம்பது டாலர்களுக்கு வாங்கி, எழுபத்தைந்து டாலர்களுக்கு விற்பார்கள், அவர்கள் கார்களை அல்லது அது போன்றவற்றைச் செய்வது போலவே, அந்த மனிதர்களை வாங்கினார்கள். ஒரு நாள் ஒரு தரகர் வந்தார், அங்கே ஒரு இளம் அடிமையை அவர்கள் கண்டார்கள். ஆ, அவன் எப்போதும் எவ்வளவு சுறுசுறுப்பாக இருந்தான், அவனை அடிக்க வேண்டிய அவசியமே இல்லை. சகோதரரே, அவன் வேலையில் மிகச் சரியாக இருந்தான்; அவன் எல்லாவற்றையும் சரியாகச் செய்தான். "அந்தத் தரகர், ""நான் அவனை வாங்கிக் கொள்கிறேன்,"" என்றார்." "அதற்கு உரிமையாளர், ""இல்லை, இல்லை, அவன் விற்பனைக்கு அல்ல. நாங்கள் அவனை விற்கமாட்டோம்,"" என்றார்." """மற்றவர்களை விட அவன் இவ்வளவு வித்தியாசமாக இருப்பது ஏன்?"" என்று அவர் கேட்டார். ""ஒருவேளை அவன் எல்லோருக்கும் தலைவனாக (boss) இருப்பானோ.""" "அதற்கு அவர், ""இல்லை, அவன் தலைவன் அல்ல. அவன் ஒரு அடிமைதான்,"" என்றார்." "அவர், ""சரி, சரி, நீங்கள் அவனுக்கு வித்தியாசமாக ஏதாவது உணவளிக்கிறீர்களா?"" என்று கேட்டார்." """இல்லை, அவர்கள் எல்லோரும் அங்கே ஒன்றாகத்தான் சாப்பிடுகிறார்கள்,"" என்றார். ""நான் அவனுக்கு வித்தியாசமாக உணவளிப் பதில்லை; அவன் தலைவன் அல்ல.""" "69 ""சரி,"" என்று அவர் சொன்னார், ""ஏன் அவன் தலையை நிமிர்த்தி, நெஞ்சை உயர்த்தி வைத்திருக்கிறான்? நீங்கள் அவனிடம் எதையாவது சொன்னால் போதும்; அவன் அதைச் செய்யத் தயாராக இருக்கிறான். அவனுடைய நடத்தை மற்றவர்களை விட இவ்வளவு சிறப்பாக இருப்பது எப்படி?""" "அவர் சொன்னார், ""ஏன் என்று நான் உனக்குச் சொல்கிறேன். நீண்ட காலமாக எனக்கே அது தெரியவில்லை,"" ஆனால், ""எனக்குத் தெரிந்து விட்டது,"" என்றார். ""அவனுடைய தகப்பன் அந்தப் பழங் குடியினரின் ராஜா. அவன் வீட்டை விட்டுப் பிரிந்த ஒரு அந்நியனாக இருந்தாலும், தன் தகப்பன் ஒரு ராஜா என்பதையும் தான் ஒரு ராஜாவின் மகன் என்பதையும் அறிந்து, மற்றவர்களின் மன உறுதியையும் உயர்த்திப் பிடிக்கிறான்,"" என்றார்." ஆண்களே, பெண்களே, இவ்வுலகத்தின் காரியங்களுக்கு நாம் இந்த பூமியில் அடிமைகளாக இருந்தாலும், நம்முடைய பிதா ஒரு ராஜா என்பதை அறிந்து நம்மை நாமே நடத்திக்கொள்வோம். அவருடைய வார்த்தையை நாம் எடுத்துக்கொள்வோம். அதுதான் சரி. நாம் அந்நியர்களாக இருக்கலாம், ஆனால் ராஜாவின் குமாரர்களாகவும் குமாரத்திகளாகவும் நம்மை நாம் நடத்திக்கொள்வோம். விழித்திருந்து செயல்படுவோம். தேவன் ஒரு வார்த்தையைப் பேசும்போது, நாம் அதை உடனே பற்றிக்கொள்வோம். அதுதான். "அவர் சொன்னார், ""நானே உன் பரிகாரியாகிய கர்த்தர்.""" """ஆமென்! அது சரி. நான் ராஜாவின் மகன். நான் அதை விசுவாசிக்கிறேன். அல்லேலூயா.""" """கேளுங்கள், அப்பொழுது பெறுவீர்கள்.""" """நான் அதை விசுவாசிக்கிறேன்.""" "70 தேவன் சொன்னார், ""கடைசி நாட்களில் நான் உங்களுக்குள் அடையாளங்களையும், தீர்க்கதரிசிகளையும் அனுப்புவேன். கடைசி நாட்களில் நான் அடையாளங்களையும் அற்புதங்களையும் காண்பிப்பேன்.""" """நான் அதை விசுவாசிக்கிறேன். ஆமென்.""" """அந்த நாட்களில் என் ஊழியக்காரர்மேலும், ஊழியக்காரிகள்மேலும் என்னுடைய ஆவியை ஊற்றுவேன்.""" """நான் அதை விசுவாசிக்கிறேன்.""" """உங்கள் வாலிபர்மேல் என் ஆவியை ஊற்றுவேன்; அவர்கள் தரிசனங்களை காண்பார்கள். உங்கள் மூப்பர் சொப்பனங்களைக் காண்பார்கள்.""" """நான் அதை விசுவாசிக்கிறேன்.""" "இயேசு சொன்னார், ""இன்னும் கொஞ்சக் காலத்திலே உலகம் என்னைக் காணாது; நீங்களோ என்னைக் காண்பீர்கள்: ஏனெனில் உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட, உங்களுக்குள்ளும் இருக்கிறேன்.""" """நான் அதை விசுவாசிக்கிறேன்.""" தேவன் அதற்கு ஒரு வழியை உண்டாக்கினார்; அவர் நம் இருதயங்களைச் சுத்திகரித்து, பரிசுத்த ஆவியானவரை உள்ளே கொண்டு வந்தார். பரிசுத்த ஆவியானவர் இப்போது இங்கே இருக்கிறார். தேவனுடைய ஆவியானவர் இப்போது இங்கே இருக்கிறார். ஓ, என்ன ஒரு அபிஷேகம். ஓ, நான் பார்ப்பதை நீங்களும் பார்க்க முடிந்தால், இப்போது என் இருதயத்தில் நான் உணர்வதை நீங்களும் அறிய முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். கேளுங்கள், இந்த அற்புதமானவர், இந்த உறுதியான அஸ்திபாரம், இந்த உண்மையான கல், தேவனுடைய இந்தக் கல், தேவனுடைய ரத்தினம், நம் ஆத்துமாவின் நங்கூரம் இப்போது இங்கே நம்முடன் இருக்கிறது. 71 நாம்... நீங்கள் அவரை உங்கள் கண்களால் பார்ப்பதில்லை. நிச்சயமாக, அவர் வேறொரு பரிமாணத்தில் இருக்கிறார். நான் அதை உங்களுக்கு நிரூபிக்க முடியும். இங்கே தொலைக்காட்சிப் படங்கள் வருகின்றன, நீங்கள் அவற்றைப் பார்க்கிறீர்களா? ஆனால் அவை இங்கேதான் இருக்கின்றன. வானொலி அலைகளிலிருந்து சத்தங்கள் இங்கே வருகின்றன, நீங்கள் அதைப் பார்க்கிறீர்களா? இல்லை, ஆனாலும் அது இங்கேதான் இருக்கிறது. நீங்கள் அதைக் கேட்கிறீர்களா? இல்லை, ஆனாலும் அது இங்கேதான் இருக்கிறது. அது வேறொரு பரிமாணத்தில் இருக்கிறது. "அப்படியே கிறிஸ்துவும் இப்போது இங்கே இருக்கிறார். அவர் சொன்னார், ""நான் செய்கிற கிரியைகளை நீங்களும் செய்வீர்கள்.""" ஓ, இந்தக் கூட்டம், இந்த முழுக் கூட்டமும் இப்போது அந்த ஒரு காரியத்தில் உறுதியாக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நீங்கள் எவ்வளவு அன்பான வர்கள். உங்கள் அன்பை நான் எவ்வளவு பாராட்டுகிறேன். ஜோசப் (Joseph) இரவில் இந்தக் காரியங்களைச் சொல்வதைக் கேட்கும் போது, நான் என் இருக்கையில் ஏறக்குறைய சுருங்கிப் போகிறேன். உங்கள் அன்பை நான் காண்கிறேன். அதற்கு நான் பாத்திரன் அல்ல. 72 ஆனால், நண்பர்களே, நான் உங்களுக்குச் சொல்கிறேன், நான் உங்களுக்குச் சொன்னது உண்மை என்று விசுவாசிக்கும் உங்கள் அன்பினால், ஒரு சிறிய நூல் இழை அளவு நீங்கள் கடந்து வந்தால், மிகவும் மகிமையான காரியங்களில் ஒன்று நடப்பதை நீங்கள் காண்பீர்கள்; நீங்கள் மட்டும் பார்த்தால், இங்கே மற்றொரு பெந்தெகொஸ்தே நாள் உண்டாகும். ஓ, நான் இதுபோல வாழ முடிந்தால், நான் இதுபோல நிலைத்திருக்க முடிந்தால், இப்போது என்மேல் இருப்பது, இப்போது பிரசன்னமா கியிருப்பது... அவர் ஒரு பரிமாணத்திலிருந்து இன்னொரு பரிமாணத்திற்கு வெளிப்பட்டு வருகிறார். அவர் இங்கே இருக்கிறார். அவர் இங்கே இருக்கிறார் என்பதை என்னால் நிரூபிக்க முடியும். ஆமென். அவருடைய வார்த்தைகள் உண்மையானவை. அவர் தோல்வியடைய முடியாது. நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? "ஜெப வரிசை வைப்பதற்கு எந்த ஜெப அட்டையும் கொடுக்கப்படவில்லை... ஆனால் இயேசு கிறிஸ்து இங்கே இருக்கிறார். ஆமென். எங்களால் மக்களை வரிசைப்படுத்த முடியாது. இயேசு கிறிஸ்து இந்த கட்டிடத்தில் உயிரோடு இருக்கிறார் என்பதை இப்போதே உங்களுக்கு நிரூபித்தால், சுகவீனமானவர்கள் எல்லோரும் அவரை ஏற்றுக்கொள்வீர்களா? அவர் பிலிப்பு மற்றும் அவர்களிடத்தில் செய்தது போல, அவர்கள் மலையைச் சுற்றி வந்தபோது, அவர் பிலிப்பை பார்த்தார், நாத்தான்வேலை பார்த்தார், அவனுக்கு என்ன நடந்தது, அவன் எங்கே இருந்தான் என்று சொன்னது போல, அதே மேசியாவின் அடையாளத்தை அவர் செய்தால்... கிணற்றடியில் இருந்த பெண்ணிடம் அவளு டைய பிரச்சனை என்ன என்று அவர் சொன்னார், அவள், ""அது மேசியாவின் அடையாளம்"" என்று சொன்னாள்." "73 அவர் அதே காரியத்தைச் செய்தால், நீங்கள் ஒவ்வொருவரும்... கவனமாக இருங்கள். நீங்கள் உங்கள் கைகளை உயர்த்தி, ""அவர் அதைச் செய்தால் நான் அதை ஏற்றுக் கொள்வேன், அவர் செய்த ஒவ்வொரு வாக்குத்தத்தத்தையும் இப்போதே ஏற்றுக் கொள்வேன்,"" என்று சொல்வீர்களா? உங்கள் கையை உயர்த்துவீர்களா? கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. நீங்கள் அதை உண்மையாகவே சொன்னீர்கள் என்று நான் நம்புகிறேன்." ஐயா, நீங்கள் சக்கர நாற்காலியில் இருக்கிறீர்கள்; நீங்கள் முடங்கியிருக்கிறீர்கள் என்று எனக்குத் தெரியும். இங்கே ஒரு பெண் முடங்கிய நிலையில் அமர்ந்திருக்கிறார். இங்கே மற்றவர்களும் முடங்கிய நிலையில் இருக்கிறார்கள். எனக்கு எந்த வழியும் இல்லை... எனக்கு எந்த வழியும் இல்லை; எனக்கு உங்களைத் தெரியாது; உங்களைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. ஆனால் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து இங்கே இப்போது எனக்கு ஒரு தரிசனத்தைக் காண்பிக்கட்டும். அவர் அப்படிச் செய்தால், நான் உங்களுக்கு உண்மையைச் சொன்னேன் என்பதையும், நான் பிரசங்கிக்கிற வேதாகமம் உண்மை என்பதையும் நீங்கள் அறிவீர்கள். "இது சத்தியம். தேவன் தம்முடைய சத்தியத்தை மெய்ப்பிக்க கடமைப் பட்டிருக்கிறார். அவர் என்ன செய்திருக்கிறார்? கடைசி நாட்களில் தம்முடைய ஆவியை ஊற்றியிருக்கிறார். அவர் சொன்னார், ""சத்தியத்தை மெய்ப்பிக்கும்படி நான் இந்தக் காரியங்களை அனுப்புவேன்.""" 74 அப்படியானால், தாம் செய்த அதே காரியங்களை நாமும் செய்வோம் என்று அவர் வாக்குத்தத்தம் பண்ணியிருந்தால், அதற்கு அவர் ஒரு வழியை உண்டாக்கியிருக்க வேண்டும். அவர் அதை உங்களுக்கு நிரூபிக்க வேண்டும் (அது சரியா?), ஏனென்றால் அவர் அதை வாக்குத்தத்தம் பண்ணியிருக்கிறார். "இப்போது, சும்மா... உங்களைத் தாழ்த்துங்கள். இந்தப் பக்கம் பாருங்கள், கட்டிடத்தில் உள்ள ஒவ்வொரு நபரும், என்னைப் பார்க்க வேண்டாம், இந்தப் பக்கம் பாருங்கள். பேதுருவும் யோவானும், ""எங்களை உற்றுப்பாருங்கள்"" என்று சொன்னதுபோல, ஏதோ பெரியவர்களாக அவர்களைப் பார்க்கும்படி அது சொல்லப்படவில்லை, ஏனென்றால் உடனே அவர்கள் தங்கள் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு, ""எங்களை அந்த விதத்தில் பார்க்காதீர்கள்"" என்று சொல்வார்கள். ஆனால் இந்தப் பக்கம் பாருங்கள், இயேசு கிறிஸ்துவைக் குறித்து இன்றிரவு நான் உங்களுக்குச் சொன்னது உண்மை என்று விசுவாசியுங்கள்." நம்முடைய இரட்சிப்பு, நம்முடைய திட்டம், நம்முடைய நங்கூரம், மற்றும் நான் பேசிய அனைத்தும், நீங்கள் இங்கே கிறிஸ்துவுக்குள் நங்கூரமிடப்பட்டிருக்கிறீர்கள் என்றால், கவலைப்படுவதால் என்ன பயன்? சந்தோஷமாயிருங்கள், செல்லுங்கள், தேவ னிடம் கேளுங்கள், பெற்றுக்கொண்டீர்கள் என்று விசுவாசியுங்கள், அவருடைய வார்த்தையின் படியே அவரைப் பற்றிக்கொள்ளுங்கள். அதுதான் விஷயம். அது உண்மை, தேவன் பதில் கொடுக்கக் கடமைப்பட்டிருக்கிறார். நீங்கள் இந்தப் பக்கம் பார்த்து அதை விசுவாசியுங்கள்; அது உங்கள் விசுவாசம். பரிசுத்த ஆவியின் அபிஷேகம்... 75 நான் ஒரு மதவெறியன் அல்ல, அது தேவனுக்குத் தெரியும், உங்களுக்கும் தெரியும். நான் ஒரு மதவெறியன் அல்ல, இல்லை ஐயா. ஆனால் நான் எதைப் பற்றி பேசுகிறேன் என்று எனக்குத் தெரியும். அவருடைய சத்தியம் என்னவென்று எனக்குத் தெரியும். நீங்கள் இந்தப் பக்கம் பார்த்து விசுவாசியுங்கள். தேவன் தமக்கு சித்தமானபடி, எனக்கு முன்பாக எதையாவது வெளிப்படுத்தட்டும், நீங்கள் விசுவாசியுங்கள். நீங்கள் அதை ஏற்றுக் கொள்வீர்கள் என்று தேவனை நோக்கி உங்கள் கையை உயர்த்துங்கள். எனக்குத் தெரியாது. நான் பார்த்து, தேவனிடம் கேட்டு, விசுவாசிக்க வேண்டும். யேகோவா தேவனே மாம்சத்தில் வெளிப்பட்டார் என்று நான் என் முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிற கர்த்தராகிய இயேசு, தேவனு டைய பரிசுத்த குமாரன்... மகிமையிலிருந்து இறங்கி வந்து, மனுஷருக்குள்ளே உலாவும்படி, தேவ குமாரன் என்று அழைக்கப்பட்ட மாம்ச சரீரத்தில் தம்மை உருவாக்கிக் கொண்ட இம்மானுவேல் தேவன் அவரே என்று நான் விசுவாசிக்கிறேன். அவர் ஒரு மனிதனைப் போல வாழ்ந்தார். ஆனால் அவர் தம்மைத் தூதர்களிலும் சற்று சிறியவராகக்கிக்கொண்டார், அதினாலே அவர் மரணத்தைத் தன்மேல் ஏற்றுக்கொண்டு, எல்லா மனிதர்களுக்காகவும் ஒரு பாவியின் மரணத்தை மரிக்கவும், விசுவாசிக்கிற எல்லா மனிதரும் அவரிடம் வந்து இரட்சிக்கப்படவும் முடியும். சாரோனின் ரோஜாவும், பள்ளத்தாக்கின் லீலியும், விடிவெள்ளி நட்சத்திரமுமாய் இருக்கிறவர், அல்பாவும் ஒமேகாவும், துவக்கமும் முடிவுமாய் இருக்கிறவர், நான் இதை அவரிடம் பாடும்போது அவர் வருவாராக. இயேசு கிறிஸ்து தேவனுடைய குமாரன் என்றும், அவருக்குள் இருக்கும் ஒவ்வொரு நபரும் தேவனிடத்தில் நங்கூரமிடப் பட்டிருக்கிறார்கள் என்றும் உலகம் அறியும்படி, நடக்க வேண்டிய காரியங்களை அவர் தம்முடைய ஊழியக்காரனுக்குக் காண்பிப்பாராக. தேவனுடைய மகிமைக்காகவும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மகிமைக்காகவும் மட்டுமே, அவருடைய குமாரனாகிய கிறிஸ்து இயேசுவின் நாமத்தில், வானங்களையும் பூமியையும் படைத்த பரலோகத்தின் பரிசுத்த தேவனை நோக்கி நான் இதைப் பாடுகிறேன். நீங்கள் விசுவாசமுள்ளவர்களாய் இருங்கள். வாழ்க்கையின் இருண்ட பாதையில் நான் நடக்கையில், துயரங்கள் என்னைச் சூழ்ந்திருக்கையில், நீரே என் வழிகாட்டியாய் இரும்; இருளை பகலாக மாற்றும், என் பயங்களையெல்லாம் துடைத்துப்போடும், இந்நாள் முதல் நான் முற்றிலும் உம்முடையவனாய் இருக்கச் செய்யும்! (நான் இனி ஒருபோதும் சந்தேகப்படாமல் இருப்பேனாக.) 76 எனக்கு முன்பாக ஒரு பெண்மணி நிற்பதை நான் பார்க்கிறேன்; அவர் ஒரு கறுப்பினப் பெண்மணி. அவர் என் இடதுபுறமாக நகர்கிறார், ஒரு சிறு பையனை வைத்திருக்கிறார். ஒரு மருத்துவர் ஏதோ ஒரு தலைச் சரும நோய்க்காகப் பரிசோதிப்பதை நான் பார்க்கிறேன். மருத்துவருக்கு அது என்னவென்றே தெரியவில்லை. அவனுக்காக நான் ஜெபிக்கும்படி நீங்கள் அவனைக் கொண்டு வந்திருக்கிறீர்கள். அது அவன் தலையில் உடைத்துக்கொண்டு வரும் ஒரு நோய். அந்தப் பெண்மணி இங்கே அமர்ந்திருக்கிறார், குழந்தை அங்கே இருக்கிறது. அது சரிதானே? அவளுடைய விசுவாசம் என்ன செய்தது என்று பார்த்தீர்களா? இப்போது குழந்தையின் மேல் உங்கள் கையை வையுங்கள். தேவனே, மருத்துவர்களுக்கு இது தெரியாமல் இருக்கலாம், ஆனால் உமக்குத் தெரியும். அந்தப் பெண்ணின் விசுவாசம் பரிசுத்த ஆவியானவரோடு ஒரு தொடர்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஓ, தேவனுடைய பரிசுத்த ஆவியே, என் ஆவி உம்மை நோக்கிக் கதறுகிறது, இந்தக் குழந்தையைச் சுகமாக்கும், இந்தத் தீங்கு அவனை விட்டு நீங்குவதாக, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில். ஆமென். சந்தேகப்படாமல், விசுவாசியுங்கள். 77 இப்போது, நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? இப்போது, நீங்கள் ஒவ்வொருவரும், அதே காரியம். இரக்கம் காண்பித்த அதே தேவன்... நான் அந்தப் பெண்ணைப் பார்த்ததே இல்லை, அவளைப் பற்றி ஒன்றுமே தெரியாது, ஒருபோதும்... நான் அவளைப் பார்த்ததே இல்லை. அவளுக்கு என்னைத் தெரியாது, எனக்கும் அவளைத் தெரியாது. ஆனால் அவள் ஜெபித்துக்கொண்டிருந்தாள். யாராவது இதைச் செய்யும்படி நான் சவால் விடுகிறேன். தோற்றத்தில் கவர்ச்சிகரமான ஒரு பெண் எனக்கு முன்பாக நிற்பதை நான் பார்க்கிறேன். அவர் எனக்கு நேராக வருகிறார். இங்கே அமர்ந்திருக்கும் அந்தப் பெண்மணிதான், உங்களுக்கு ஒரு தொற்று இருக்கிறது; அது உங்கள் சிறுநீர்ப்பையில் இருக்கிறது. அது சரி. அது சரியானால், இங்கே அமர்ந்திருக்கும் இளம் பெண்ணே, உங்கள் கையை உயர்த்துங்கள். எழுந்து நில்லுங்கள். கூட்டத்தைப் பார்த்துத் திரும்புங்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப் பாராக. சகோதரி, அதன் ஒவ்வொரு வார்த்தையும் உண்மைதானே? "நான் சொல்வது புரிகிறதா? அது என்ன? நாத்தான்வேல் அவரிடத்திற்கு நடந்து வந்த போது, ""இதோ, கபடற்ற உத்தம இஸ்ர வேலன்,"" என்று அவர் சொன்னார். தேவன் ஒரு வழியை உண்டாக்கினார். அவர் ஒரு வழியை உண்டாக்கியிருக்கிறார். உங்களுக்காக அவர் ஒரு வழியை உண்டாக்கியிருக்கிறார். இப்போது, சுகத்திற்கான வழி கல்வாரியில் ஏற்கனவே ஆயத்தம் பண்ணப்பட்டிருக்கிறது. " உங்கள் சுகம் அங்கே ஏற்கனவே கிரயத்துக்கு வாங்கப் பட்டுவிட்டது. ஆனால் அவர் எதை உண்டாக் கியிருக்கிறார்? அவருடைய நாமம் ஸ்தோத் திரிக்கப் படுவதாக. நீங்கள் பரிசுத்த ஆவியான வரைத் தொடர்புகொள்ளவும், இது சத்தியம் என்பதை மெய்ப்பிக்கவும், பரிசுத்த ஆவியான வருக்கான ஒரு வழியை அவர் உண்டாக் கியிருக்கிறார். நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? 78 இப்போது, ஒருவர்மேல் ஒருவர் கைகளை வையுங்கள். எல்லாம் முடிந்தது; அது நிறைவேறிவிட்டது. ஜெப வரிசையில் ஐம்பது பேர் இருந்தாலும், அது அப்படியே நடக்கும். இப்போது, அது உங்கள் விசுவாசம். நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? உங்களுக்கு என்ன பிரச்சனை என்று நான் கவலைப்படவில்லை. என்னால் உங்களைச் சுகமாக்க முடியாது. தேவன் தரிசனத்தைக் காண்பிக்க முடியும்; அதை நீங்கள் பார்க்கிறீர்கள். இது டெலிபதி (telepathy) அல்ல. அந்த மக்களை நான் எப்படி அறிய முடியும்? அவர்களைப் பார்த்ததே இல்லை. இன்னொருவர் வருவதை நான் பார்க்கிறேன். ஆனால் ஒரு நிமிடம் உங்கள் தலைகளைத் தாழ்த்துங்கள். பரம பிதாவே, நீர் நான் என்ன செய்ய விரும்பினீர் என்பதை நான் பார்க்கிறேன். நான் பலிபீட அழைப்பிற்குப் பிறகு கட்டிடத்தை விட்டு வெளியேறிக் கொண்டிருந்தேன், ஆனால் நீர் இங்கே யாரையோ வைத்திருந்தீர்; "சந்தேகத்திற்கு இடமின்றி நீர் யாருக் காகவோ வலை வீசிக் கொண்டிருந்தீர். தேவனே, இன்றிரவு அதை அருளும். இப்போது, அவர்கள் ஒருவர்மேல் ஒருவர் கைகளை வைத்துக்கொண்டிருக்கையில், ""விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங் களாவன"" என்று நீர் சொன்னீர். நீர் அவர்கள் மத்தியில் இருக்கிறீர் என்பதை நிரூபித்தால், அவர்கள் விசுவாசிப்பார்கள் என்று சற்று நேரத்திற்கு முன்பு அவர்கள் தங்கள் கைகளை உயர்த்தினார்கள்." இப்போது, பிதாவே, நீர் ஏற்கனவே அவர்களைச் சுகமாக்கிவிட்டீர், அவர்கள் ஒவ்வொருவரும் சுகமடைந்துவிட்டார்கள் என்று நான் அவர்களிடம் சொன்னேன். நீர் கல்வாரியில் மரித்தபோது, அவர்களுடைய சுகத்தை அங்கேயே கிரயத்துக்கு வாங்கிவிட்டீர். எல்லாம் முடிந்தது. ஆண்டவரே, இப்போது அவர்கள் அதைப்போலவே செயல்படட்டும். அவர்கள் இங்கிருந்து உண்மையான கிறிஸ்தவர்களைப் போல நடந்துகொண்டு, உம்மை விசுவாசித்து வெளியே செல்லட்டும். இந்த கட்டிடத்தில் உள்ள ஒவ்வொரு வியாதியையும், ஒவ்வொரு உபாதையையும் நான் சபிக்கிறேன் (condemn). இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், நான் பிசாசை கடிந்து கொள்கிறேன்.